வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ரீல் மகளுக்கு குட்டு வைத்த VJS.. ரவீந்தரின் வெளியேற்றமும் ரிவ்யூவும், பிக்பாஸ் 8 Day 7

Biggboss 8 Day 7: பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி யாருக்கு நன்றாக போனதோ இல்லையோ ஆடியன்ஸ்க்கு திருப்திகரமாக அமைந்திருக்கிறது. தேவையில்லாத எதையும் பேசாமல் ரத்தின சுருக்கமாக ஆரம்பித்து போட்டியாளர்களை ரோஸ்ட் செய்ததில் இருந்து அவர்களின் தப்பை சுட்டிக் காட்டியது வரை விஜய் சேதுபதி கலக்கிவிட்டார்.

அதை வைத்துப் பார்க்கும்போது தற்போது அவர் பாஸ் மார்க் வாங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதிரடியாக இருந்த அவருடைய ஸ்டைல் அடுத்தடுத்த வாரங்களிலும் ஃபயராக இருக்கும் என இந்த வார இறுதி காட்டிவிட்டது. அதன்படி ஏழாவது நாளின் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி இங்கு காண்போம்.

கலக்கல் காஸ்டியூமில் வந்த விஜய் சேதுபதி பார்வையாளர்களிடம் கொஞ்சம் ஹார்ஷா நடந்துக்கிறேனா என கேட்டு தெளிவு படுத்திக் கொண்டு போட்டியாளர்களை சந்தித்தார் தர்ஷிகாவின் கேப்டன்சி எப்படி இருந்தது என ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை கூறினார்கள்.

அதை அடுத்து ஒவ்வொருவராக ரோஸ்ட் செய்து வந்த VJS சாச்சனாவிடம் பெண்களில் மூன்று வீக்கான நபர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னியே அதை சம்பந்தப்பட்டவர்களிடம் சொன்னியா என கேட்டார். அதற்கு அவர் இல்லை என்று சொன்ன நிலையில் ரவிந்தரிடம் சொன்னதையும் விஜய் சேதுபதி தெரியப்படுத்தினார்.

சுனிதா, அன்சிதா, சௌந்தர்யா மூவரை பற்றி தான் சாச்சனா கூறியிருந்தார். இதில் அதிக கடுப்பானது சுனிதா தான். யூனிட்டி மண்ணாங்கட்டின்னு சொல்லிட்டு இப்படியா எதிர் டீம்ல போய் சொல்றது என அங்கேயே கொந்தளித்து விட்டார்.

போட்டியாளர்களை பற்றி ரவீந்தர் கொடுத்த ரிவ்யூ

இதை சமாளிக்க தெரியாத சாச்சனா ஏதேதோ சொல்லி மழுப்பினார். அதன் பிறகு ரஞ்சித் ரவீந்தரிடம் மன்னிப்பு கேட்டு மனக்கசப்பை முடித்து வைத்தார். அதன் பிறகு எலிமினேஷன் நிகழ்வு நடைபெற்றது.

அனைவரும் எதிர்பார்த்தபடி ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். அவருக்கு பிரியா விடை கொடுத்த போட்டியாளர்கள் கண்ணீர் விட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர். அதை தொடர்ந்து மேடையில் வந்த அவரை விஜய் சேதுபதி போட்டியாளர்களைப் பற்றி ரிவ்யூ செய்ய சொன்னார்.

இருங்க சார் அவங்க என்ன வாழ்த்தட்டும் இப்ப எப்படி அன்பா பேசுவாங்க பாருங்க. அதுக்கு அப்புறம் எப்படி வச்சு செய்றேன்னு பாருங்க என கூறினார். அதேபோல் போட்டியாளர்கள் நீங்க நல்லவரு வல்லவரு என ஆரம்பித்ததை பார்த்து விஜய் சேதுபதி உட்பட அரங்கில் இருந்தவர்கள் வெடித்து சிரித்தனர்.

பார்க்கும் நமக்கே அப்படித்தான் இருந்தது. அதைத் தொடர்ந்து ரவீந்தர் ஒவ்வொருவரை பற்றி கணித்து சொன்ன விஷயம் அத்தனையுமே உண்மையானது தான். நிச்சயம் இவருடைய வெளியேற்றம் நிகழ்ச்சிக்கு பெரும் இழப்புதான்.

அதிலும் அர்னவ் நீ பக்கா ஃபேக் என சொன்னது 100 சதவீதம் உண்மை. வெளியில் தனக்கு இருக்கும் கெட்ட பெயரை மாற்ற சாச்சனாவை வைத்து அவர் சிம்பதி டிராமா போட்டதெல்லாம் ஏற்கனவே விமர்சனம் ஆனது தான்.

இனிமேலாவது அவர் இந்த நடிப்பை ஓரம் கட்டி விட்டு விளையாட்டில் கவனம் செலுத்தினால் சிறந்தது. இப்படியாக நேற்றைய நிகழ்ச்சி சுவாரசியமாக நகர்ந்தது. அதை ஆடியன்ஸ் என்ஜாய் செய்யும் வகையில் கொண்டு சென்ற விஜய் சேதுபதியும் ஒரு தொகுப்பாளராக மக்களை கவர்ந்து விட்டார்.

- Advertisement -

Trending News