பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.. மாட்டிகிட்டியே பங்கு, நிக்சனை ரோஸ்ட் செய்த ஆண்டவர்

Biggboss 7: பிக்பாஸ் வார இறுதி நாளை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் சொல்லிக் கொள்ளும்படியான மிக சில சம்பவங்கள் தான் நடந்தது.

அதனாலேயே ஆண்டவர் இந்த வாரம் என்ன செய்யப் போகிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்க்கும் போது கமல் செம ஃபயரில் இருக்கிறார் என தெரிகிறது. அதிலும் நேற்று விசித்ராவிடம் பொங்கிய நிக்சன் இன்று வசமாக சிக்கியுள்ளார்.

Also read: இவரா, அவரா வெளியேறப் போவது யாரு.? கடைசி நேரம் வரை ஆட்டம் காட்டும் பிக்பாஸ்

அதன்படி கமலிடம் விசித்ரா என்னை மேம் என கூப்பிட சொன்னபோது நிக்சன் சார் என கூப்பிடச் சொன்னார். அதிலிருந்தே நான் அப்படித்தான் அழைக்கிறேன் என கூறினார். உடனே பதறிப்போன நிக்சன் நான் சொல்லலையே என எஸ்கேப்பாக பார்த்தார். ஆனால் ஆண்டவர் நாங்க பார்த்தோமே என சொன்னதை பார்க்கும் போதே சம்பவம் உறுதி என தெரிந்தது.

அதைத்தொடர்ந்து ஐசு விவகாரத்தை கையில் எடுத்த விசித்ரா கமலிடம் புகார் கொடுக்கிறார். கடந்த வாரமே இது குறித்து கமல் பேசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது முடியாத நிலையில் இப்போது ஆண்டவர் சவுக்கை கையில் வைத்து விசாரணையை ஆரம்பிக்க இருக்கிறார்.

Also read: மாயா, பூர்ணிமாவுக்குள் விழுந்த விரிசல்.. எதிரெதிர் துருவமாக மாறப்போகும் Bully Gang

அதன்படி நான் உங்களுக்கு புரிய வைக்கட்டுமா நிக்சன் என கமல் கேட்டது தான் ப்ரோமோவின் ஹைலைட். இப்படியாக வெளிவந்துள்ள இந்த வீடியோவை பார்க்கும் போதே இன்றைய எபிசோடில் நிக்சனுக்கு அர்ச்சனை எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர்.