சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இது பிக்பாஸா, சூனியக்கார வீடா.? இளசுகளை களையெடுக்க திட்டம் தீட்டும் பெருசுகள்

Biggboss 7: பிக்பாஸ் ஆட்டம் இப்போது தான் சூடு பிடித்துள்ளது. நேற்று ஐந்து புது வரவுகள் வீட்டுக்குள் வந்ததிலிருந்தே பழைய போட்டியாளர்களின் முகம் பொலிவிழந்து காணப்படுகிறது. அதிலும் சில விஷ பாட்டில்கள் எப்படி அவர்களை பழிவாங்குவது என யோசிக்க ஆரம்பித்து விட்டனர். அதன்படி இன்று பல பரபர சம்பவங்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது.

அந்த வகையில் இந்த வாரம் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பூர்ணிமாவின் மண்டையை கழுவும் வேளையில் இறங்கி இருக்கின்றனர் சீனியர் மக்கள். அதாவது புது வரவுகளை அப்படியே அலேக்காக தூக்கி ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் போட்டு இலவச இணைப்பாக விச்சும்மாவையும் அனுப்பிவிட்டால் ஆட்டம் களைக்கட்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம்.

ஏனென்றால் விசித்ராவுக்கு வீட்டில் இருப்பவர்களில் பாதி பேரை பிடிக்காது. அப்படி இருக்கும்போது புதுசா வந்தவர்களையா கொண்டாட போகிறார். அதனாலேயே இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நிச்சயம் வீட்டில் கலவரம் வெடிக்கும் என பிளான் போட்டுள்ள பெருசுகள் அதை சரியாக செயல்படுத்தியுள்ளனர்.

அது மட்டுமின்றி அவர்களை எந்தெந்த மாதிரி டார்ச்சர் செய்யலாம், சோறு கொடுக்காமல் பழிவாங்கலாம் என்பது போன்ற சில வில்லத்தனமான விஷயங்களையும் அவர்கள் செய்ய இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் புதிதாக வந்திருப்பவர்களுக்கு ஒவ்வொருவரின் குணமும் அத்துபடி என்பதுதான்.

யார் எந்த மாதிரியாக விளையாடுகிறார்கள் என்பதை நன்றாக தெரிந்து கொண்டு உள்ளே நுழைந்திருக்கும் அவர்களால் கேம் மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனாலயே பழைய பீசுகள் இப்போது தங்களுடைய வன்மத்தை வெளிப்படையாக கக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கு கேப்டன் பூர்ணிமாவும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்.

கடந்த வாரம் சிறந்த கேப்டன் என்று கமலிடம் பாராட்டு வாங்கிய அவர் இந்த வாரம் குட்டு வாங்க போவது உறுதி என்பது இதிலிருந்தே தெரிகிறது. அந்த அளவுக்கு அவருடைய மூளையை சலவை செய்து வரும் போட்டியாளர்கள் வில்லங்கமான பிளானை இறக்கவும் யூகித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி பிக்பாஸா இல்ல சூனியக்கார வீடா என தெரியாத அளவுக்கு மாறி இருக்கும் நிகழ்ச்சியில் கண்ணுக்கு குளிர்ச்சியாக பல சம்பவங்கள் அரங்கேற இருக்கிறது.

- Advertisement -

Trending News