5 புது வரவுகளால் பிக்பாஸ் ஆட்டம் மாறுமா.? கேமை மாற்ற போகும் போட்டியாளர் யார்? அரண்டு போன பழைய பீசுகள்

Biggboss 7: கடந்த வாரம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று 5 புது வரவுகள் என்ட்ரி கொடுத்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் அதிரடியாக இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் வினுஷா வீட்டை விட்டு சென்றது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.

ஆனால் யுகேந்திரனின் வெளியேற்றம் இப்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தே இந்த விளையாட்டை சிறப்பாக விளையாடி வந்த அவர் எதிர்பாராத விதமாக எவிக்ட் செய்யப்பட்டுள்ளது அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க நேற்று முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ரட்சிதாவின் கணவர் தினேஷ் எனக்கு பதில் ஒருவர் வெளியேற வேண்டும் என்று ட்விஸ்ட் வைத்து சுவாரசியத்தை ஏற்படுத்தினார்.

இதனால் பீதியில் உறைந்து போன போட்டியாளர்களுக்கு கொஞ்ச நேரம் போக்கு காட்டி இறுதியில் விக்ரம் காப்பாற்றப்பட்டார் என்ற செய்தியை கூறினார். அதைத்தொடர்ந்து வந்த அன்னபாரதியை பார்க்கும்போது அவர் பெரிதாக விளையாட்டுப் பற்றிய பிளான் இல்லாமல் வந்தது போல் தோன்றுகிறது. ஆனால் இவருடைய வரவு விச்சும்மாவுக்கு பிடிக்கவில்லை என்பது அவருடைய முகத்திலேயே தெரிந்தது.

அதைத்தொடர்ந்து விஜே அர்ச்சனா, கானா பாலா, ஆர் ஜே ப்ரவோ ஆகியோர் வீட்டுக்குள் வந்தனர். இதில் அர்ச்சனா சில யுக்தியோடு இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் கானா பாலாவை பொருத்தவரை இதில் ஆரம்பத்தில் அவர் தடுமாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் ரொம்பவும் வெகுளியாக இருக்கிறார்.

இப்படி கலவையான மனிதர்கள் உள்ளே நுழைந்து இருப்பது பழைய போட்டியாளர்களை கொஞ்சம் ஜெர்க் ஆக வைத்திருக்கிறது. அதில் சிலரின் முகத்தில் பீதி அப்பட்டமாகவே தெரிந்தது. அந்த வகையில் பழைய பீசுகளுக்கு ஆட்டம் காட்டி உள்ளே வந்திருக்கும் ஐந்து புது வரவுகளும் இந்த பிக்பாஸ் ஆட்டத்தை மாற்றி தனி முத்திரை பதிப்பார்களா என்பது போகப் போக தெரிந்து விடும்.

அதேபோன்று இப்போதே வீட்டில் இருக்கும் சிலர் விளையாட்டை எப்படி மாற்றலாம் என பிளான் போட்டு வருவதையும் பார்க்க முடிந்தது. இப்படியாக நேற்றைய நிகழ்ச்சி படு சுவாரசியமாக இருந்தது. அதை தொடர்ந்து இந்த சீனியர், ஜூனியர் போட்டியில் கேமை மாற்றப்போவது யார் என்பதும், மக்களின் ஆதரவு யாருக்கு என்பதும் அடுத்தடுத்த வாரங்களில் தெரியவரும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்