இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்.. காப்பாற்றப்படும் சகுனி மாயா

BB7 3rd Week Elimination: கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக போய்க் கொண்டு இருக்கிறது. அதிலும் போனவாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மாயாவை எப்படியாவது வெளியேற்றி விட வேண்டும் என பார்வையாளர்கள் முடிவு கட்டி இருந்தார்கள். ஆனால் பவா செல்லதுரை எதிர்பாராத விதமாக வெளியேறியதால் மாயா எலிமினேஷன் ஆகாமல் தப்பித்துக் கொண்டார்.

இந்த வாரம் மீண்டும் மாயா நாமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார். போனவாரம் போட்ட ஸ்கெச்சில் தப்பித்த இவர், இந்த வாரம் கண்டிப்பாக வெளியேறி விடுவார் என எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பார்வையாளர்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களும் மாயா எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மாயாவின் நடவடிக்கைகள் தான் முக்கிய காரணம்.

இன்றைய ப்ரோமோவில் மாயா மீது பார்வையாளர்களுக்கு சிம்பதி வரும் வகையில் காட்டப்பட்டது. இருந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லாமல், எல்லோரும் அவரை கழுவி ஊற்ற ஆரம்பித்து விட்டார்கள். கண்டிப்பாக இந்த வாரம் மாயா தான் எலிமினேஷன் என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், வான்டட் ஆக ஒரு போட்டியாளர் முன்வந்து மாயாவை காப்பாற்றும் வேலையில் இறங்கி இருக்கிறார்.

நேற்று வரைக்கும் மாயா ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருந்த நிலையில், தற்போது டான்ஸ் மாஸ்டர் மணிசந்திரா கடைசி இடத்திற்கு வந்துவிட்டார். மாயா நெகட்டிவ்வாக கன்டென்ட் கொடுத்தாலும் அவரால் அந்த வீட்டில் ஒரு பிரயோஜனம் இருக்கிறது. ஆனால் மணி எதற்கு உள்ளே இருக்கிறார் என்று தெரியவில்லை பார்வையாளர்களை பயங்கரமாக பயங்கரமாக வெறுப்பேற்றும் வகையில் காதல் என்ற பெயரில் கிரிஞ்சு வேலையில் இறங்கியது தான் இதற்கு முக்கிய காரணம்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரவீனா விளையாட்டை நன்றாக புரிந்து கொண்டு விளையாடுகிறார். ஆனால் மணி தானும் விளையாடாமல், ரவீனாவையும் விளையாட விடாமல் செய்து வருகிறார். அறிவுரை சொல்லுகிறேன் என்ற பெயரில், ரவீனாவை யாருடனும் சேர விடாமலும் தடுத்து வருகிறார். இதனால் தான் பார்வையாளர்கள் அவர் மீது செம காண்டில் இருக்கிறார்கள்.

காதல், பொசசிவ் என கடுப்பேற்றி வருகிறார் மணி. அவர் வெளியேறிவிட்டால் ரவீனா நன்றாக விளையாடுவார் என்பதுதான் தற்போது பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. இதனால் தான் கண்டன்ட் கொடுக்கும் மாயாவை விட்டுவிட்டு, மணியின் பக்கம் தற்போது திரும்பி விட்டார்கள். மணிக்கு ஓட்டுகள் குறைந்து கொண்டே வருவதால் தற்போது மாயா அவருக்கு முன்னிலையில் இருக்கிறார். இதனால் இந்த வாரம் மாயா வெளியேற வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்