அவங்க புருஷன் கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கணும்.. சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ள போட்டியாளர்களில் முக்கியமான போட்டியாளராக கருதப்படுபவர் விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வீட்டிற்குள் யார் சோகமாக இருந்தாலும் தன்னுடைய நகைச்சுவை பேச்சால் அவர்களை பழைய நிலைக்குக் கொண்டு வரும் அதில் கில்லாடி என ஆரம்பத்தில் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வந்தனர்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல பிரியங்காவும் போன சீசன் அர்ச்சனா போல் ஆகி விடுவாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கிவிட்டது. கடந்த சில நாட்களாகவே அவருடைய நடவடிக்கைகள் எதுவும் ரசிகர்களை கவர்ந்ததாக தெரியவில்லை.

இது ஒரு புறமிருக்க கடைசி வாரம் நதியா சாங் என்பவர் போட்டியில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அப்போது நதியா தன்னுடைய கணவரை பற்றி கூற அதில் நெகிழ்ந்து போன பிரியங்கா அவருடைய கணவரை பார்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என கூறியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

என்னதான் பாசத்தில் பிரியங்கா கூறியிருந்தாலும் அடுத்தவர் கணவரை பற்றி எப்படி இப்படிக் கூறலாம் என்ற ஒரு கேள்வி எழுந்து பிரியங்கா மீதான நன் மதிப்பை குறைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் சிரித்துக்கொண்டே ஊசி ஏற்றுவது போல் பிரியங்கா பேசுவதும் சக போட்டியாளர்களுக்கு கடுப்பை வர வைத்துள்ளது என்பதும் கூடுதல் தகவல்.

priyanka
priyanka
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்