வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பிக் பாஸ் ரஞ்சித்துக்காக வெளியே போர் கொடி தூக்கிய மனைவி.. மொத்த ஓட்டையும் ஒரு வார்த்தையால் மாற்றிய பிரியா

Bigg Boss Ranjith and Priya raman: ரஞ்சித் பிக் பாஸ் வீட்டிற்குள் போவதற்கு முன் கவுண்டம்பாளையம் என்ற படத்தின் மூலம் பல சர்ச்சைகளில் சிக்கி நெகட்டிவ் விமர்சனங்களை வாங்கினார். அப்படிப்பட்டவர் பிக் பாஸ் வீட்டுக்குள் போனதும் இவரை ஏன் உள்ளே அனுப்பினீர்கள். இவர் ஒரு பிற்போக்குத்தனமாக யோசிக்க கூடியவர், இவருடைய கேரக்டருக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் தாக்கு பிடிக்க முடியாது என்று தொடர்ந்து பல எதிர்மறையான கருத்துக்கள் ரஞ்சித் மீது வந்தது.

அதே மாதிரி உள்ளே போனதும் அவருடைய பாஷை படி தங்கம், அம்மணி என்று சில வார்த்தைகளால் பேசும்பொழுது வெளியே நக்கல் அடித்து ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் தர்ஷா புடவை கட்டி வரும் பொழுது ரஞ்சித் பார்த்த பார்வைக்கு தவறு இருக்கிறது என்று இதற்கும் சேர்த்து ட்ரோல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது ட்ரோலாக ரவீந்தர் உடன் சேர்ந்து ரஞ்சித் பிராங்க் பண்ணிய பொழுது அனைவரும் உண்மை என்று நம்பி விட்டார்கள். இதனால் பெண்கள் மிகவும் பயந்து போய் விட்டார்கள். ஆனால் கடைசியில் இது எல்லாம் சும்மா என்று தெரிந்தவுடன் சௌந்தர்யா மற்றும் ஜாக்லின் என்னது அண்ணா என்று ரஞ்சித்தை பார்த்து கேள்வி கேட்டார்கள்.

உடனே ரஞ்சித், சௌந்தர்யா நெற்றியில் ஒரு முத்தத்தை கொடுத்து ஜாக்லின் கன்னத்தை பிடித்தார். இதையும் சேர்த்து ட்ரோல் பண்ணும் அளவிற்கு ரஞ்சித்தை வச்சு செய்தார்கள். தற்போது இந்த மூன்று ட்ரோலுக்கும் பதிலளிக்கும் விதமாக ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன் வெளியே தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

அதில் அவர் கூறியது பார்க்கும் பொழுது ரஞ்சித் உண்மையிலே தங்கமான மனுசர். அவர் மீது பிரியாராமன் ரொம்ப நம்பிக்கையும் பாசத்தையும் வைத்திருக்கிறார் என்பது போல் தெரிகிறது. அத்துடன் அவர் சொன்னது அவங்க ஊர் பாசப்படி தான் ரஞ்சித் வெளியே எப்படி இருந்தாரோ அதே மாதிரி தான் உள்ளேயும் பேசிக் கொண்டிருக்கிறார்.

வீட்டிலேயும் டிரைவர் சமையல் பண்றவங்க கூட அவர் அப்படித்தான் பேசுவாங்க. டிரைவர், சமைக்கிறவங்க என்ற வார்த்தை கூட அவர் யூஸ் பண்ண மாட்டார். அந்த அளவிற்கு எல்லோரிடமும் அவர் அன்பை வெளிப்படுத்தும் விதமாக தங்கம், அம்மணி என்ற வார்த்தைகளை தான் யூஸ் பண்ணி பேசுவார் என்று கூறியிருக்கிறார்.

அதற்காக இந்த வார்த்தைகளை தவறான கண்ணோட்டத்தை பார்த்து அவர் மீது தேவையில்லாத பழி போட வேண்டாம். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அடுத்ததாக தர்ஷவை தவறான கண்ணாடத்துடன் ரஞ்சித் பார்த்தது என்று சொல்வது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் தனிப்பட்ட முறையில் தர்ஷா மற்றும் ரஞ்சித் இருவருமே செந்தூரப்பூவே என்ற நாடகத்தின் மூலம் பழகி இருக்கிறார்கள்.

அதுபோக ரஞ்சித் பாக்க கூடிய அளவுக்கு தர்ஷா ஒன்றும் இல்லை. அவருடைய நோக்கமும் பார்வையும் தப்பில்லை நீங்கள் பார்க்கும் பார்வை தான் தவறாக இருக்கிறது என்று பதிலடி கொடுத்திருக்கிறார். அடுத்ததாக அவர் பிராங்க் பண்ணிய பொழுது முழுசாக நம்பி பயந்து போனது சௌந்தர்யா மற்றும் ஜாக்லின் தான். அதனால் அவர்களுடைய பயத்தை கம்மி பண்ணுவதற்காக அப்பா குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது போல் தான் நெற்றியில் கொடுத்து ஜாக்கலினை அரவணைத்தார்.

இதிலும் எந்தவித தவறும் இல்லை நிச்சயம் ரஞ்சித் பற்றி தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். அத்துடன் ரஞ்சித்தின் முத்தம் தவறான முத்தம் இல்லை அப்பா மகளுக்கு கொடுக்கிற முத்தம் போல் தான் இருந்தது என்று தெள்ளத் தெளிவான பதிலை கொடுத்திருக்கிறார். கடைசியாக ரவீந்தருக்கு உதவி பண்ணி தான் நமக்கு வெளியே பேர் வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்ற நிலைமை ரஞ்சித்துக்கு கிடையாது.

அவர் எத்தனையோ விருதுகளையும் பேரும் புகழையும் சம்பாதித்து விட்டு தான் போயிருக்கிறார். அந்த வகையில் அவருடைய உண்மையான குணமே மற்றவர்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே தான் இருக்கும். அதனால்தான் ரவீந்தர் உடல் ரீதியாக கஷ்டப்படும்போது முதல் ஆளாக ரஞ்சித் நின்னு உதவி செய்திருக்கிறார் என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.

இப்படி ரஞ்சித் பற்றி ஒவ்வொரு விஷயங்களும் வெளியே பிரியா ராமன் சொல்லும் பொழுது உண்மையிலேயே ரஞ்சித் ஒரு சிறந்த மனிதர் என்பது போல தான் மக்களும் ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். அதிலும் பிரியா ராமன் கொடுத்த விளக்கம் மற்றும் ரஞ்சித் பற்றிய சொன்ன விஷயங்கள் அனைத்தும் மக்களும் புரிந்து கொண்டு தொடர்ந்து ரஞ்சித்துக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இனி ரஞ்சித்துக்கு வெளியே மக்கள் ஓட்டு அதிகரிக்குமா? ரஞ்சித் தொடர்ந்து மக்களிடம் நல்ல பெயரை வாங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News