சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக் பாஸ்.. சீசன் 7 ரகடு பாயை வெளியேற்றிய ஆண்டவர்

BB7: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் வாரம் அனன்யா எலிமினேட் செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டில் இருந்து உடல் நல குறைவை காரணம் காட்டி வெளியேறினார். இதை அடுத்து மூன்றாவது வார இறுதி நாளான நாளை பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்பட்டார் என்பது உறுதியானது.

இந்த முறை 11 பேர் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். அதில் வினுஷா தேவி, அக்ஷயா, மாயா, விஜய் வர்மா ஆகிய நான்கு பேர் மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ளனர். அதில் விஜய் வர்மா தான் நாளை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார்.

இவர் ஏற்கனவே ஸ்ட்ரைக் கார்டை பெற்ற நிலையில், இந்த  வாரத்தில் மறுபடியும் விஷ்ணுவுடன் நெஞ்ச நிமித்துக்கிட்டு சண்டைக்கு போனார். அவருடைய கழுத்திலேயே கை வைத்து மூஞ்சி மொகரைய உடைத்துவிடுவேன் என்றும் வாய்விட்டார்.

இதனாலே கமல் இவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்புகிறார். அது மட்டுமல்ல பிரதீப் ஆண்டனியையும் தாக்கிய நிலையில் விஜய் வர்மாவிற்கு ரெட் கார்ட் கொடுத்தது கரெக்ட்தான். இவர் பிக் பாஸ் வீட்டில் ஒரு நடன கலைஞராக என்ட்ரி கொடுத்தார்.

பின்பு முதல் வாரமே கேப்டன் ஆகி கெத்து  காட்டினார். போன சீசனில் அசீம் போலவே சண்டை போட்டு டைட்டிலை வென்று விடலாம் என்ற நினைப்புடன் பலரையும் முறைத்துக் கொண்டு வன்முறையை கையில் எடுத்து ஓவராக ஆட்டம் போட்டார்.

இவருக்கு கமல் முதல் வாரத்திலேயே வார்னிங் கொடுத்தார். அப்படியும் அடங்காத விஜய் வர்மாவை அதிரடியாக இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து கமல் எவிட் செய்துள்ளார். இதன் பிறகு பிக் பாஸ் வீடு இந்த ரகடு பாய் இல்லாமல் சைலன்டாக இருக்கப் போகிறது. அடுத்ததாக சூனியக் கிழவி மாயாவையும் வெளியேற்றினால் இன்னும் கேம் நல்லா இருக்கும்.

- Advertisement -

Trending News