16 வயது குறைவான இளம் நடிகையை திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி பிரபலம்..

தன்னைவிட 16 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டார் பாடலாசிரியர் சினேகன். பல பாடல்கள் வெற்றிப் பாடல்களாக அமைந்தாலும் பிக்பாஸ் மூலமே அனைவரும் பரிச்சயமானவர் பாடலாசிரியர் சினேகன். இவர் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் மிகவும் பிரபலம்.

1978ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தவர் சினேகன் பெற்றோர் வைத்த பெயர் சிவசெல்வம். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு சென்னை வந்து வைரமுத்துவிடம் ஐந்து வருடம் பணியாற்றினார். ஒரு நூல் வெளியீட்டு விழாவில் கே பாலச்சந்தரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்த புத்தம் புது பூவே படத்தில் பாடல் எழுதி இருந்தார் இதுவரை 2500க்கும் மேல் பாடல்கள் எழுதியுள்ளார்.

பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, சாமி, ஆட்டோகிராப், ராம், தவமாய் தவமிருந்து, பருத்திவீரன் படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். இயக்குனர் அமீரின் நண்பர் என்பதால் அவர் இயக்கிய யோகி படத்தில் நடித்திருப்பார்.

இவர் திருமணம் செய்துகொண்ட கன்னிகா ரவி 1994 ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் எழுத்தாளர், நடிகை, சிலம்பாட்ட வீரர் என பன்முகத் தன்மை கொண்டவர். இருவருக்கும் சென்ற மாதம் திருமணம் நடைபெற்றது. உலகநாயகன் தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

snehan
snehan

திருமணமாகி சில நாட்களிலேயே ஆன நிலையில் இருவரும் அவரவர் வேலைகளை செய்யத் தொடங்கினர். ஏன், என்று கேட்டதற்கு முதலில் வேலை தான் முக்கியம் என்று கூறிவிட்டனர். நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தங்கள் புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்