வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பளிச்சுன்னு அடிக்கும் விசித்ரா.. ஒரேடியா ஓரங்கட்ட பார்க்கும் ஹவுஸ் மேட்ஸ்

Bigg Boss Vichitra: தற்போது இரண்டாவது வாரத்தில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் விசித்ராவை தான் டார்கெட் செய்திருக்கின்றனர். தொடக்கத்தில் இருந்தே இந்த சீசன் சூடுப்பிடிப்பதால் போட்டியாளர்கள் அடுத்து யாரை வெளியேற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்.

அதிலும் மாயா ஒரு ஏஜென்ட் கேங் போல் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகளை கிளப்பு விடுகிறார். மற்ற சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் வயதில் மூத்தவர்களை உள்ளே வைத்திருக்கக் கூடாது, தேவையில்லாமல் அறிவுரை சொல்லி பிளேடு போடுவார்கள் என்று விசித்ராவை இந்த வாரம் வெளியேற்ற பார்க்கின்றனர்.

இதை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பூர்ணிமாவை வைத்து காய் நகர்த்துகின்றனர். பூர்ணிமாவும் விசித்ராவிடம் வந்து, ‘எதற்காக சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அடிக்கடி சொல்கிறீர்கள்’ என்று ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் சார்பில் வக்காலத்து வாங்குகிறார்.

உடனே கோபமான விசித்ரா, ‘உனக்கு இதை பத்தி பேச எந்த தகுதியும் இல்ல. இங்க இருக்கிறதா அங்கு போய் சொல்றது, அங்க இருக்குறத இங்க வந்து சொல்றதுன்னு சகுனி வேலை பார்க்கும் உன்னுடைய கேவலமான எண்ணம் எனக்கு நல்லாவே தெரியும்’ என்று முகத்திற்கு நேராகவே பூரணிமாவை வெளுத்து வாங்கி விட்டார். இதனால் கோபம் அடைந்த பூர்ணிமா பதிலுக்கு பதில் விசித்ராவுடன் சண்டை போடுகிறார். எல்லை மீறிய வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த இடத்தை விட்டு விசித்ரா சென்று விடுகிறார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற அக்ஷயா அட்வைஸ் என்கின்ற பெயரில் விசித்ராவிடம், ‘நீங்க செஞ்சது ரொம்ப தப்பு. எதற்காக பூரணிமாவிடம் இவ்வளவு வெறுப்பாக பேசுகிறீர்கள். நீங்கள் அம்மா ஸ்தானத்தில் இந்த வீட்டில் நிறைய பேருக்கு அட்வைஸ் சொல்கிறீர்கள். ஆனால் அது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிந்து விட்டால் அதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் கேட்க மாட்டார்கள்’ என்று அறிவுரை சொல்கிறார்.

தற்காலத்தில் இருக்கும் இளைய தலைமுறைகளுடன் விசித்ராவால் சேர்ந்து பயணிக்க முடியாவிட்டாலும், அவர் சொல்கிற கருத்துக்களில் எந்த தவறும் இல்லை. இந்த வீட்டில் நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் எல்லாம் விசித்ராவை அட்டாக் செய்து கண்டெண்ட் கிரியேட் பண்ணி எஸ்கேப் ஆகிவிட பார்க்கின்றனர். மக்களே உஷாரா இருந்து ஓட்ட போடுங்க.

- Advertisement -

Trending News