வெங்கடேஷ் பட் இல்லாத குக் வித் கோமாளி சீசன் 5.. ஆளில்லாமல் பிக் பாஸ் போட்டியாளர்களை குத்தகை எடுத்த விஜய் டிவி

Cook With Comali Season 5 : விஜய் டிவியில் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் வகித்து வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. ஒவ்வொரு சீசனும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விரைவில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

கடந்த நான்கு சீசன்களில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் நடுவராக பங்கேற்று வந்தனர். ஆனால் இந்த சீசனில் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில் நடிகர் மற்றும் சமையல் கலை வல்லுநரான மதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்க உள்ளார்.

மேலும் எப்போதும் போல ரக்சன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் நிகழ்ச்சிக்கு ஆணிவேராக உள்ள புகழ், சுனிதா, குரேஷி, பாலா போன்ற பிரபலங்கள் கோமாளியாக
பங்கேற்க இருக்கிறார்கள்.

அதேபோல் இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் பட்டியலும் இப்போது வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் முடிந்த பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்குவதால் அதில் உள்ள பல பிரபலங்கள் எப்போதுமே இதில் பங்கு பெறுவார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்கள்

அந்த வகையில் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வினுஷா, விஷ்ணு மற்றும் தினேஷ் ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளாராம்.

இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி கலந்து கொண்டார். அதோடு அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அடுத்ததாக டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட் கலந்து கொள்ள உள்ளார்.

நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசி உள்ளார். இவரைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மகள் அகாஷதா சமையல் மீது உள்ள ஆர்வத்தால் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற நடிகை ஹேமாவும் இதில் கலந்து கொள்கிறார்.

அடுத்ததாக மலையாளம், தமிழ் போன்ற படங்களில் நடித்த மாளவிகா மேனன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற அதிக அளவு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மற்ற போட்டியாளர்களின் விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்