புது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிக் பாஸ் 5 போட்டியாளர்கள்.. தொகுப்பாளர் யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 ரசிகர்களின் பேவரைட் சீசனாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் இதில் பங்குபெற்ற போட்டியாளர்கள். அதிரடிக்கு பஞ்சமில்லாத இந்த சீசனில் அடுத்த நிமிடமே நட்பு பாராட்டுவார்கள். இவர்கள் இயல்பான குணத்தை வெளிப்படுத்தி மக்களின் மனதைக் கவர்ந்து உள்ளார்கள்.

ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவருக்கும் தனி ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் புதுமுகங்கள் ஆகவே இருந்தனர். இருந்தபோதும் மிகக் குறுகிய நேரத்திலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்து உள்ளார்கள்.

பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூக்கு பல தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக வெளியில் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு பிறகும் இவர்கள் நட்புடன் பழகி வருவது பாராட்டுக்குரியது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பங்குபெற உள்ளார்கள். இந்நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து 2 சீசன்களாக பிரியங்கா தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் வீட்டுக்கு சென்றதால் இந்நிகழ்ச்சியை தற்போது மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் பிரியங்கா, ராஜு, நீருப், சிபி, மதுமிதா, அபிஷேக் ஆகியோர் பங்குபெற உள்ளார்கள். இவர்கள் ஸ்டார்ட் மியூசிக் செட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதனால் அடுத்த வார ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி கோலாகலமாக இருக்கப் போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்