வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இரண்டாவது வாரத்திலேயே டைட்டில் வின்னரை உறுதி செய்த பிக் பாஸ்.. பக்கவாக காய் நகர்த்தும் விஜய் டிவி

Bigg boss 8 Tamil Title Winner: பிக் பாஸ் தொடங்கி இரண்டு வாரத்தில் ரவீந்தர் மற்றும் அர்னவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். இதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் மூன்றாவது வாரமாக இன்று குருநாதர் சொன்னது என்னவென்றால் இந்த வாரம் உங்க இஷ்டப்படி யார் யார வேண்டுமானாலும் நாமினேஷன் பண்ணிக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்.

அதன்படி ஒவ்வொரு போட்டியாளரும் அவர்களுக்கு வேண்டாத போட்டியாளர்களை வெளியே அனுப்புவதற்காக நாமினேஷன் செய்து வருகிறார்கள். அந்த வகையில் வழக்கம் போல ஜாக்லின், சௌந்தர்யா, அக்ஷிதா, சத்தியா, பவித்ரா நாமினேஷன் லிஸ்டில் தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து முத்துக்குமார், தீபக், தர்ஷா இவர்களும் நாமினேஷனுக்கு வருவார்கள்.

ஆனால் கடந்த வாரம் ஓட்டுக்கணப்பின்படி தர்ஷா மற்றும் சாச்சினா தான் கம்மியான வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். அதன்படி இவர்களில் இருவர் இந்த வாரமும் வந்தால் நிச்சயம் சாச்சினா தான் வெளியே போக வாய்ப்பு இருக்கிறது. இதனை அடுத்து அந்த வீட்டில் மூளையை கசக்கி பக்கவாக காய் நகர்த்தி ஒவ்வொருவரையும் தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து சதுரங்க வேட்டையை விளையாடி வருகிறார் முத்துக்குமார்.

அந்த வகையில் இவருடைய பேச்சுக்கும் அறிவுக்கும் இடையில் எந்த போட்டியாளரும் வெற்றி பெற முடியாது என்பதற்கு ஏற்ப பிக் பாஸ் வீட்டிற்குள் மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் இவருடைய விளையாட்டை பார்க்கும் பொழுது நமக்கு பழைய சீசனங்களில் விளையாடிட்டு போன ஆண் போட்டியாளர்களான மூன்று பேரை ஞாபகப்படுத்துகிறது.

அதாவது ஆரி போல தெளிவான பேச்சும், விக்ரம் போல தந்திரமும், அசிம் மாதிரி துடுக்கலான பேச்சையும் வைத்து மூன்று பேருடைய கலவையாக விளையாடி வருவது போல் தோன்றுகிறது. அதனால் தான் என்னமோ முத்துக்குமாருக்கு மக்களின் சப்போர்ட் அதிகரித்து வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி முத்துகுமார் தொடர்ந்து இப்படியே விளையாடி வந்தால் நிச்சயம் இவருக்கு தான் மக்களின் ஓட்டு அதிகரிக்கும்.

அதன்படி பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் கோப்பையும் பரிசையும் முத்துக்குமார் அசால்டாக தூக்கி விடுவார். அதே மாதிரி முத்துக்குமார் உடன் போட்டி போட்டு விளையாடும் அளவிற்கு உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அந்த அளவிற்கு வலுவாக தெரியவில்லை.

இதனால் விஜய் டிவி வழக்கத்திற்கு மாறாக அவருடைய சொம்பு தூக்கிகளை டார்கெட் பண்ண முடியாமல் முத்துக்குமாரை போக்கஸ் பண்ணி அவருடைய விளையாட்டை மக்கள் ரசித்துப் பார்க்கும்படி காய் நகர்த்தி வருகிறது. அதனால் பிக் பாஸ் ஆரம்பித்த இரண்டாவது வாரத்திலேயே முத்துக்குமார் தான் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார் என்பது தெரிந்து விட்டது.

- Advertisement -

Trending News