பிக் பாஸ் 7-ல் ஒரு நாளைக்கு அதிக சம்பளம் வாங்கும் 6 போட்டியாளர்கள்.. தின்னுட்டு, தூங்குறதுக்கு இவ்வளவா?

Bigg Boss contestants Salary: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து சண்டை, சச்சரவு, பஞ்சாயத்து என பல சுவாரசியங்களை கொண்டு வருகிறது. இதற்கிடையில் காதல் ரொமான்ஸ் என பல சில்மிஷங்களும் நடக்கிறது. அந்த வகையில் இப்பொழுது வரை எந்த ஒரு போட்டியாளருமே மக்களுக்கு பிடித்த மாதிரி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் அவருடைய குணத்தை மாற்றிக் கொண்டு யூகிக்க முடியாத அளவிற்கு விளையாடி வருகிறார்கள். போதாக்குறைக்கு வைல்ட் கார்டு எண்ட்ரியாக இன்னும் 5 போட்டியாளர்கள் வரப்போகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் போட்டி இன்னும் கடுமையாக போகப் போகிறது.

அந்த வகையில் பிரதீப், விஷ்ணு, மாயா தற்போது வரை ஓரளவுக்கு பரவாயில்லை என்று மக்களின் ஆதரவை வாங்கி வருகிறார்கள். இவர்களை தவிர மற்ற போட்டியாளர்கள் கண்டெண்டுக்காக ஏதோ பண்ண வேண்டும் என்று நேரத்தை பொழுது போக்கிக் கொண்டு வருகிறார்கள்.

இதில் இன்னும் சில பேர் வெறும் தூங்குறதும் திங்கறது மட்டுமாகவே வேலையை வச்சு சுற்றி வருகிறார்கள். இந்த சூழலில் அவர்களுக்கும் ஒரு நாள் சம்பளம் என்று ஒதுக்கப்பட்டு தான் இருக்கிறது. அப்படி இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் வாங்கக்கூடிய சம்பளம் என்னவென்று தற்போது பார்க்கலாம்.

அந்த வகையில் இருப்பதிலேயே கம்மியான சம்பளம் யார் என்றால் அனன்யா ராவ். இவர் ஒரு நாளைக்கு 12000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அடுத்து ஜோவிக்கா 13000, நிக்சன் 13000, ஐசு மற்றும் பூர்ணிமா 15000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அடுத்ததாக மாயா, சரவண விக்ரம், கூல் சுரேஷ், மணி மற்றும் ரவீனா இவர்கள் அனைவரும் 18,000 சம்பளம் வாங்குகிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து அதிகமான சம்பளத்தை வாங்கக்கூடிய போட்டியாளர் யார் என்றால் யுகேந்திரன் மற்றும் விசித்ரா. இவர்கள் இருவரும் ஒரு நாளைக்கு 27 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். இவர்களுக்கு அடுத்து எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக்கிட்டு மூஞ்சிய அமுல் பேபி மாதிரி வச்சுக்கிட்டு வரும் விஷ்ணு 25000 ரூபாய் ஒரு நாளைக்கு வாங்குகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்