சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஃபேன் இல்ல, AC போடணும்.. கோட் வேர்ட் மூலம் பிளான் பி-யை இறக்கும் பிக்பாஸ் குள்ளநரி

Biggboss 7: இதுவரை இல்லாத அளவுக்கு பிக்பாஸ் சீசன் 7 தான் கடும் எதிர்ப்பலையை சந்தித்து வருகிறது. அதில் விதிமீறல் செய்வது, கோட் வேர்ட் வைத்து பேசுவது என பல அக்கப்போர்கள் கடும் பஞ்சாயத்தாகவே மாறி இருந்தது.

அது மட்டுமில்லாமல் ரவீனாவை பார்க்க வந்த அமெரிக்க ஆன்ட்டி ரெட் என்ற கோட் வேர்டை பயன்படுத்தியது பிக்பாஸை கோபப்பட வைத்தது. அதை தொடர்ந்து ஆன்ட்டி உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இப்படி எல்லாம் நியாயஸ்தனாக இருந்த பிக்பாஸ் மாயா விஷயத்தில் மட்டும் அமைதியாக இருக்கிறார்.

Also read: 2 நாள் கத்திட்டு மறந்திடுவாங்க.. டிஆர்பி வெறி பிடித்த விஜய் டிவி, மொத்த மானத்தையும் வாங்கிய பிக்பாஸ் 7

தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோ பார்ப்பவர்களை கடும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது. அதாவது மாயா மைக்கில் பிக்பாசிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். அதாவது எங்கள் வீட்டில் ஃபேன் கிடையாது. அதனால் எங்கள் அக்காவிடம் சொல்லி ஹாலில் ஏசி மாட்ட சொல்லுங்கள்.

ஏசி போட்டால் விண்டோ எல்லாத்தையும் சீல் பண்ணனும். அதை நான் வந்து பார்த்துக்கிறேன் என்று சம்பந்தமில்லாமல் உளறினார். ஆனால் இதை பார்க்கும் போதே தெள்ளத்தெளிவாக தெரிந்தது. அது அவருடைய பிஆர்டிமுக்கு கொடுக்கும் கோட் வேர்ட் என்று.

Also read: அர்ச்சனாவுக்கு ஜால்ரா போடும் இணைய கைக்கூலிகள்.. கோர்த்துவிட்ட பிக்பாஸ், உருட்டுக்கு தயாராகும் ஆண்டவர்

அதன்படி எனக்கு ஃபேன்ஸ் ஆதரவு கிடையாது. அதனால் காசு கொடுத்து ஓட்டு போட சொல்லுங்கள். இந்த AC என்பது அக்கவுண்ட் என்பதை குறிக்கிறது. அதே போன்று விண்டோ சீல் பண்ணனும் என்கிற வார்த்தை காசு பிரச்சனையை நான் வந்து பார்த்துக்கிறேன் என்பதை குறிக்கிறது.

இப்படியாக அவர் விதிமுறையை மீறி வெளியில் இருப்பவர்களுக்கு க்ளு கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது வைரல் ஆகி வருகிறது. இதையெல்லாம் பிக் பாஸ் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்று கேள்வியும் எழுந்துள்ளது. ஆனாலும் வழக்கம் போல மாயா இந்த வாரம் காப்பாற்றப்பட்டு விடுவார் என்பது மட்டும் உறுதி.

- Advertisement -

Trending News