ஒன்றரை டஜன் போட்டியாளர்களை பிக்பாஸில் களமிறங்கிய விஜய் டிவி! மாடல் அழகிகளால் நிரம்பிய வீடு!

விஜய் டிவியில் நேற்று பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது கோலாகலமாக துவங்கப்பட்டது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் யார் யார் என்பது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. ஏனென்றால் நீண்ட நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை குறித்த செய்தியானது சமூக வலைத்தளத்தில் உலாவியது.

தற்போது அதற்கு பதில் கிடைக்கும் வகையில், போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் யார் யார் என்றால்,

கானா பாடகி இசைவாணி, சீரியல் நடிகர் ராஜு, மாடல் மதுமிதா, யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, விஜே பிரியங்கா, ஜெமினி கணேசன் பேரன் நடிகர் அபினய் வட்டி, சீரியல் நடிகை பாவனி ரெட்டி, நாட்டுப்புற பாடகி சின்னப்பொன்னு, மாடல் நாடியா சாங், நடிகர் வருண், தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி, மாடல் சுருதி, மாடல் அக்ஷரா, ரேப்பர் ஐகி பெர்ரி, தெருக்கூத்து நடிகை தாமரைச்செல்வி, மாஸ்டர் நடிகை சிபி, பெங்களூரில் நிறுவனம் நடத்தி வரும் நிரூப்

ஆகிய 18 போட்டியாளர்கள் தான் தற்போது பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர். இதில் 7  போட்டியாளர்கள் மட்டுமே ஆண்களாக உள்ளன. ஆகையால் இந்த சீசனிலும் பெண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

bb5-final-contestance
bb5-final-contestance

அதிலும் குறிப்பாக 7 மாடல் அழகிகளை பிக்பாஸ் போட்டியாளர்களாக விஜய்டிவி தேர்ந்தெடுத்திருப்பது பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின்  சுவாரசியத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதைப்போல் இந்த சீசனில் கண்டிப்பாக காதல் டிராக் ஓடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்