நாமெல்லாம் ஒன்றானோம் கக்கூஸ் கழுவி ஃப்ரெண்ட் ஆனோம்.. பிக்பாஸ் சீசன் 5 வைரலாகும் முதல் நாள் பஞ்ச்.!

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் கருப்பு நிற உடையில் அசத்தலாக வந்து போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார்.

இம்முறை பதினெட்டு பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.அதில் பெண் போட்டியாளர்களே அதிகமாக உள்ளனர். பிக்பாஸ் வீட்டின் முதல் நாள் நடைபெற்ற காட்சிகள் நமக்கு ப்ரோமோவாக காட்டப்படும்.

தற்போது விஜய் டிவி முதல் புரோமோவை வெளியிட்டுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் லிவிங் ஏரியாவில் அமர்ந்துள்ளனர். அப்போது வழக்கம்போல் பிக்பாஸ் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்க கூறுகிறார்.

5 பேர் கொண்ட குழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதில் நடிகர் ராஜு, தான் பாத்ரூம் கழுவ செல்வதாக கூறுகிறார். இதுதான் ரொம்ப ஈஸியான வேலை என்று கலகலப்பாக கூறுகிறார்.

அப்பொழுது அங்கு சோபாவில் அமர்ந்து இருக்கும் தொகுப்பாளினி பிரியங்கா நாமெல்லாம் ஒன்றானோம் கக்கூஸ் கழுவி ஃப்ரெண்ட் ஆனோம் என்று பஞ்ச் டயலாக் பேசுகிறார். அதைக்கேட்ட போட்டியாளர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

இவ்வாறு முதல் ப்ரோமோ ஒரே கலகலப்பாக வெளிவந்துள்ளது இதை கண்ட ரசிகர்கள் 100 நாள் வேலை ஆரம்பித்து விட்டது எனவும், பிரியங்கா தன் பெயரை கெடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் கருத்துக்களை பதித்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்