இந்திய அணியில் 6 இடத்திற்கு பிரச்சனை.. முட்டி மோதிக்கொள்ளும் 2 தமிழர்கள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த மேட்சை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய அணி தேர்வில் பயங்கர குழப்பத்தில் உள்ளார் கேப்டன் ரோகித் சர்மா. இந்திய அணியில் 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை அனைத்து வீரர்களும் அதிரடியாக ஆடக் கூடியவர்கள். அதனால் அணியை தேர்வு செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது.

கே.எல் ராகுல், அக்சர் பட்டேல் , வாசிங்டன் சுந்தர் ஆகிய 3 வீரர்களுக்கு இந்திய அணியிலிருந்து ஓய்வு வழங்கப்படுகிறது. ரோகித், இஷான் கிஷன், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோர் முதல் ஆறு இடங்களில் இடம் பெறுவார்கள்.

7வது இடத்தில் ஆல்ரவுண்ட் வெங்கடேஷ் ஐயர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக வீரர்களாகிய ஷாருக்கான் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்களில் யாரேனும் ஒருவர் கட்டாயமாக இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.

இவர்களை தவிர்த்து ஆல்ரவுண்டர் இடத்தில் தீபக் கூடா வேறு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். ஆகையால் இந்திய அணியை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது.

தமிழக வீரரை பொருத்தவரை ஷாருக்கானுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது, ஏனென்றால் போட்டியை முடித்து தருவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆகையால் அவரை நம்பி களம் இறக்கலாம் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.