கோலாகலமாக தொடங்கும் 15வது சீசன்.. மும்பையில் நடக்கும் இரண்டு மாத ஐபிஎல் திருவிழா

மும்பையில் கோலாகலமாக இன்று தொடங்கவிருக்கிறது 15வது சீசன் ஐபிஎல் போட்டிகள். 2022 ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகி மே இறுதிவரை நடக்கவிருக்கிறது. சென்றமுறை போல் இல்லாமல் இந்த முறை அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு அணிக்கும் புதுப்புது கேப்டன்கள் தேர்வாகி உள்ளனர்.

இந்த முறை 10 அணிகள் என்பதால், 3 குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மெகா ஏலம் மூலம் பல வீரர்களும் வெவ்வேறு அணிகளுக்கு சென்றுவிட்டனர். ஒவ்வொரு அணியும் சமமான பலத்துடன் இருக்கிறது.

இந்த சீசனில் விராட் கோலி, தோனி, வார்னர் ஆகியோர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், அவர்களுக்கு பதிலாக புது கேப்டன்கள் அந்தந்த அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த முறை நிறைய வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளை தவற விட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு இணையான பல புது வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.

இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் கடந்த முறை இறுதிச் சுற்றில் மோதிய சிஎஸ்கே அணியும், கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றது. முதல் போட்டியிலேயே பலமிக்க இரு அணிகள் மோதிக்கொள்வது ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தி வருகிறது.

அன்றோ ரஸில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்றவர்கள் இருப்பதால் அந்த அணியை கட்டுப்படுத்துவது சிஎஸ்கே அணிக்கு பெரும் சவாலாக இருக்கும். கேப்டனாக ரவீந்திர ஜடேஜா முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்குவார். ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது..

தோனி கேப்டனாக மட்டும்தான் அணியை வழி நடத்த வில்லை. ஆனால் அவர் போட்டியில் நிச்சயமாக பங்கு பெறுவார். ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்தாலும் தோனியின் அறிவுரையை கேட்டு தான் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.