மின்னல் முரளி படத்திற்காக அடித்துக்கொள்ளும் 2 பிரபலங்கள்.. என்ன காரணம் தெரியுமா.?

இதுவரைக்கும் ஹாலிவுட்டில் தான் ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட் மேன் என சூப்பர் ஹீரோக்களை மையப்படுத்தி படங்கள் வெளியாகி வந்தன. ஆனால் தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ படங்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அதிலும் தமிழில் சொல்ல வேண்டாம்.

முதல் முறையாக இயக்குனர் மிஷ்கின் நடிகர் ஜீவாவை வைத்து முகமூடி என்ற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கி இருந்தார். ஆனால் அந்த படம் வரவேற்பை பெறாததால் அதன் பின்னர் தமிழ் சினிமாவில் எந்தவொரு சூப்பர் ஹீரோ படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது மலையாளத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படம் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாஷில் ஜோசப் இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் தான் மின்னல் முரளி. ஒரே சமயத்தில் இருவரை மின்னல் தாக்குகிறது. அதில் அந்த இருவருக்கும் சூப்பர் பவர் கிடைக்க ஒருவன் ஹீரோவாகவும் மற்றொருவன் வில்லனாகவும் உருமாறுகிறார்கள்.

இதில் ஹீரோவாக டொவினோவும், வில்லனாக குருசோமசுந்தரமும் நடித்துள்ளனர். ஹீரோவைவிட வில்லனின் நடிப்பே பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒரு சூப்பர் ஹீரோ கதையை கையில் எடுத்ததோடு அதை மிகவும் திறம்பட செய்துள்ளார் இயக்குனர் பாஷில் ஜோசப். இப்படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்ற இரண்டு நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்களாம். அவர்கள் வேறு யாருமல்ல நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் தான். ஆனால் இவர்கள் இருவருக்கும் இந்த கேரக்டர் பொருந்துமா என்பது சந்தேகமே.

அதுமட்டுமல்ல சூப்பர் ஹீரோ கான்செப்ட்டை படமாக எடுப்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. எனவே அந்த படத்தை அதே இயக்குனரை வைத்து ரீமேக் செய்யலாம் அல்லது தமிழில் திறமை வாய்ந்த ஒரு இயக்குனரை வைத்து இயக்கலாம். அதை தவிர்த்து நல்ல படத்தை சொதப்பி விடாதீர்கள் என மின்னல் முரளியின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்