ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மொத்த காசையும் போட்டு வெளிவந்த ராக்கெட்டரி நம்பி எப்படி இருக்கு?.. டிவிட்டர் விமர்சனம்

ஒரு நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த மாதவன் தற்போது ஒரு இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் இவர் தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ராக்கெட்டரி திரைப்படம் இன்று உலகம் முழுவதிலும் வெளியாகி இருக்கிறது.

மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்காக மாதவன் தன் மொத்த காசையும் செலவு செய்திருக்கிறார். நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படத்தை பார்த்த ரசிகர்கள் நம்பி நாராயணனாக வாழ்ந்திருக்கும் மாதவனை பாராட்டி வருகின்றனர். படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் மாதவனின் நடிப்பு பிரமிக்க வைக்கும் வகையில் இருப்பதாகவும், கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சூர்யா வரும் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த வகையில் சூர்யா இந்த படத்திற்கு ஒரு சப்போர்ட்டாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஒரு விஞ்ஞானிக்கு நடந்த கொடுமையை மிகவும் துணிச்சலாக காட்சிப்படுத்தியிருக்கும் மாதவனுக்கு தற்போது பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த பயோபிக் திரைப்படம் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. மேலும் படத்தின் இடம்பெற்றுள்ள பல உணர்ச்சிபூர்வமான காட்சிகள் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. இதனால் மாதவன் தற்போது ஒரு இயக்குனராக ஜெயித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆக மொத்தம் ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ஆழ்த்தி இருந்த இந்த ராக்கெட்டரி திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்காத வகையில் அனைவரையும் திருப்தி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

Trending News