டிஆர்பி-காக கள்ளக்காதலை ஊக்குவித்த பிக்பாஸ்.. இதுலாம் ஒரு பொழப்பு என காரித்துப்பும் ரசிகர்கள்

உலகெங்கும் உள்ள மக்களுக்கு பிடித்தமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி பிக் பாஸ், பிக் பிரதர் ஆகிய பெயர்களில் உலகம் முழுவதும் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிறது.

சமீபத்தில்தான் தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு இடையே கள்ளக்காதல் உருவானதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.

மேலும் இதை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பங்கம் செய்து வருகின்றனராம். அதாவது ஹிந்தியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியை தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகையான ராக்கி சாவந்த் கலந்து கொண்டுள்ளாராம். இவர் தமிழில் கம்பீரம் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாலிவுட்டில் பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி உள்ளாராம் நடிகை ராக்கி.

இவர் கடந்த ஆண்டு ரித்தேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ராக்கி சாவந்த் மற்றும் அபினவ் சுக்லாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் நெருங்கி பழகுவதாகவும் சொல்லப்படுகிறது.

அதேபோல் நடிகை ராக்கி சமீபத்தில் தன்னுடைய உடல் முழுவதும் ‘ஐ லவ்யூ அபினவ்’ என்று எழுதி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இன்றுவரை பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி உள்ள ராக்கி, அபிநவ் ஆகியோரின் கள்ள காதலை பற்றி சல்மான்கானும் எதுவும் சொல்லவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைத் தளங்களின் வாயிலாக கேள்வி எழுப்பி வருகின்றனராம்.

bb14-cinemapettai

அதுமட்டுமில்லாமல் டிஆர்பி-காக இப்படியெல்லாம் கேவலமான வேலை பார்ப்பது சரியா? என்று நெட்டிசன்கள் அந்த சேனலை கிழித்து கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்