முதல் வைல்ட் கார்ட் என்ட்ரி யார் தெரியுமா.? கவர்ச்சிப் புயலை களமிறக்கும் பிக்பாஸ்

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பொதுவாக பிக் பாஸின் முதல் சீசன் மற்றும் மூன்றாவது சீசன் ஆனது சுவாரசியம் நிறைந்ததாகவும் இரண்டாவது மற்றும் நான்காவது சீசன் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆகையால் ஆர்டு(odd)  நம்பர்களில் வரும் பிக் பாஸ் சீசன்கள் ரசிகர்களால் தவிர்க்க முடியாத சீசன்கள் என்பதால் தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

அதற்கேற்றார்போல் கடந்த சில தினங்களாகவே பிக்பாஸ் போட்டியாளர்கள் காரசாரமான விவாதங்களை பிக்பாஸ் வீட்டில் நிகழ்த்துகின்றனர். எனவே 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த சீசனில் திருநங்கை நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறிவிட்டார்.

மீதமிருக்கும் 17 போட்டியாளர்கள் சுவாரசியம் குறையாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் கூடுதலாக வைல்ட் கார்டு போட்டியாளராக நடிகை ஷாலு ஷம்மு-வை வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அக்டோபர் 17ஆம் தேதி பிக்பாஸ் வீட்டில் விஜய் டிவி முடிவெடுத்து விட்டது.

shalu-shamu-1
shalu-shamu-cinemapettai

இவர் சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து தனது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிடுவதன் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். ஆகையால் இந்த சீசனின் விறுவிறுப்பை கூட்டுவதற்கு ஷாலு ஷம்மு முக்கிய காரணமாக இருப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை ஷாலு ஷம்முவை பிக்பாஸ் வீட்டில் காண்பதற்கு அவருடைய ரசிகர்கள் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்