இந்த வாரம் பிக் பாஸில் வெளியேறப் போவது இவர் தான்.. எட்ட முடியாத உயரத்தில் ராஜுக்கு விழுந்த ஓட்டுகள்

விஜய் டிவி பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இந்த வாரத்தில் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அக்ஷரா, ராஜு, இமான் அண்ணாச்சி, அபினை, பாவனி, சிபி, மதுமிதா ஆகிய ஏழு பேர் உள்ளன.

இவர்களில் மக்களிடமிருந்து அதிக வாக்குகளைப் பெற்று ராஜு முதலிடத்திலும், அதைத்தொடர்ந்து அக்ஷரா, சிபி, அபினை ஆகியோர் உள்ளனர். கடைசி மூன்று இடத்தை பாவனி, இமான் அண்ணாச்சி, மதுமிதா ஆகியோர் பிடித்துள்ளனர்.

இதில் மதுமிதா மற்றும் இமான் அண்ணாச்சி இவர்களது நிலைமை தான் கவலைக்கிடமாக உள்ளது. ஏனென்றால் இமான் அண்ணாச்சி தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனவே இணையத்தில் வெளியான ஓட்டிங் லிஸ்டை வைத்துப் பார்க்கும்போது இத்தனை வாரங்களாக குறைந்த வாக்குகளைப் பெற்ற அபினை கூட மக்கள் மனதை மெல்ல மெல்ல கவர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் வீட்டிலேயே மூத்தவராக இருக்கும் இமான் அண்ணாச்சி செய்கின்ற ஒருசில செயல்கள் பிக்பாஸ் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

bb5-voting-cinemapettai

ஏனென்றால் இவர் வயதில் மூத்தவர் என்பதால் ஒரு சில விஷயத்தில் இளையோர் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லை. குறிப்பாக இசைவாணி உடன் அடிக்கடி இமான் அண்ணாச்சி சின்னப்பிள்ளை போல் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

bb5-voting-cinemapettai8
bb5-voting-cinemapettai

ஆகையால் இமான் அண்ணாச்சி தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் வரும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் அளிக்கும் வாக்குகளில் மாற்றம் ஏதாவது வந்திருக்கிறதா? என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்