நீ புடுங்குற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணி தான்.. இசைவாணிக்கு ரிவிட் அடித்த ஆண்டவர்!

விஜய் டிவியின் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் சீசன்5 ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் கமல், இசைவாணிக்கு ஆப்பு மேல ஆப்பு கிடைத்துக் கொண்டே போனது. அந்த விதமாக இசைவாணி ராஜூவுக்கு அளித்த பட்டம் குறித்து கேட்டார் கமல்.

அதாவது இசைவாணி ராஜிக்கு அளித்த பட்டம்  ‘இவன் புடுங்குற ஆணி எல்லாம் தேவை இல்லாத ஆணி தான்’. ஆனால் உண்மையில் பார்த்தால் இந்தப் பட்டத்திற்கு உரித்தானவர் என்றால் அது இசைவாணி தான்.

ஏனெனில் இசைவாணி தன்னையும் குழப்பி தன்னுடன் இருக்கும் மற்றவர்களையும் குழப்பி பார்க்கும் ரசிகர்களை குழப்பி ஒரு குழப்பவாதி ஆகவும் புரியாத புதிராகவுமே இந்த போட்டியில் இருந்து வருகிறார்.

இப்படி இவர் பேசும் வார்த்தைகளும் செய்யும் செயல்களும் இந்த பட்டத்திற்கு ஏற்றது போல் இருக்கும். ஆனால் இவரோ இதனை ராஜுவுக்கு அளித்துவிட்டார்.

இதனைப் பற்றி கேட்ட கமல், நீங்க இதை ராஜாவுக்கு கொடுத்தது சரி என நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதன்பிறகு முழு நிகழ்ச்சியிலும் இசைவாணியையே குறிவைத்து கமல்ஹாசன் தொடர்ந்து கேள்விகளால் சிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்க முடியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருந்த இசைவாணியை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், ‘நீ புடுங்குற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணி தான்’ பட்டத்திற்கு பொருத்தமான ஆள் நீங்கதான் என தோன்றுகிறது போல என்று பங்கமாய் கலாய்த்தார். இவ்வாறு இசைவாணி பல ஆப்புகளை வாங்கி அடுக்கிக் கொண்டே போனார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்