அக்ஷராவை கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்த போட்டியாளர்.. பீப் சவுண்டு போட்டு வெறுப்பான பிக் பாஸ்

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் லட்சுரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்றது. அப்போது போட்டியாளர்களின் பெயருடன் கொடுக்கப்பட்ட பொம்மைகளை மற்றவர்கள் தூக்கிக்கொண்டு கூடாரத்திற்குள் ஓடுவதன் மூலம் ஒருவர் மற்றவரை காப்பாற்ற முடியும்.

அந்த வகையில் அக்ஷரா, வருண் இருவரையும் தோற்கடிக்கும் எண்ணத்தில் நிரூப் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நிரூப் மற்றும் வருண் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் முற்றி கெட்ட வார்த்தைகளையே அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

அதுமட்டுமின்றி சண்டைக்கு தீர்வுகாணும் நோக்கத்தில் இடையில் வந்த சிபியும் அக்ஷராவை பார்த்து கோபத்தில் கெட்ட வார்த்தையை பேசிவிட்டார். இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு அதிகமாக பீப் சவுண்ட் போடப்பட்டது.

அத்துடன் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தொடக்க நாளில் இருந்தே கமலின் அறிவுரையை கேட்டும், கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் மறந்து இஷ்டத்திற்கு விளையாடுகின்றனர். எனவே வரும் சனிக்கிழமை அன்று இவர்களுக்கு கமல் செம டோஸ் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இருப்பினும் அடுத்தவர்கள் வீட்டு சண்டை என்றால் ஆர்வத்துடன் பார்க்கும் சிலர் கூட்டத்திற்கு நேற்றைய நிகழ்ச்சியில் சண்டை சச்சரவு உடன் அரங்கேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியை உல்லாசமாக கண்டுகளித்தனர்.

akshara-bb5-cinemapettai
akshara-bb5-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்