இணையத்தில் லீக்கான அட்டகாசமான பிக்பாஸ் OTT லோகோ.. உறுதியான போட்டியாளர்கள்!

தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, தமிழ் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது ரசிகர்களிடையே சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறி கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் தமிழ் பிக் பாஸ் இதுவரை நான்கு சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஐந்தாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆகையால் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் நிறைவடைய உள்ளது. எனவே அடுத்த சீசன் எவ்வாறு இருக்கும், யார்யார் பங்கேற்பார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே இப்போதே எழத் தொடங்கி விட்டது. எனவே அடுத்த பிக்பாஸ் சீசன், பிக் பாஸ் OTT என்ற பெயரில் நேரடியா ஹாட்ஸ்டாரில் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இதில் போட்டியாளர்கள் புதிதாக இல்லாமல், ஏற்கனவே நடந்து முடிந்த பிக்பாஸ் சீசனில் யார் சுவாரசியம் மிகுந்த நபராக விளையாடினார்களோ, அவர்களைத் தேர்ந்தெடுத்து பிக் பாஸ் OTT-ல் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனுக்கும் தனித்தனி லோகோ வெளியாகும்.

அந்த வகையில் பிக் பாஸ் OTT -ன் லோகோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த லோகோவில் இருக்கும் கண்கள், ஆந்தை கண்போல் பயமூட்டும் அளவிற்கு உள்ளது. மேலும் பிக் பாஸ் OTT நிகழ்ச்சியில் ஓவியா பங்கேற்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதற்காக பிக்பாஸ் குழுவினர் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடக்கத் தொடங்கியுள்ளனர்.

bb-ott-logo-cinemapettai
bb-ott-logo-cinemapettai

கூடிய விரைவில் பிக் பாஸ் OTT -ல் ஓவியா கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி வெளியாக உள்ளது. பிக் பாஸ் OTT நிகழ்ச்சியில் மொத்தம் 13 போட்டியாளர்கள் கலந்து கொண்டு, 42 நாட்கள் விளையாட உள்ளன. ஆகையால் பிக் பாஸ் சீசன 5 நிகழ்ச்சி இன்னும் மூன்றே வாரத்தில் நிறைவடைந்த உடனே, வரும் ஜனவரி மாதம் இறுதி நாளில் பிக் பாஸ் OTT நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

ஆகையால் இதுவரை நடந்த சீசனில் யார் யார் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தார்கள், பிக் பாஸ் OTT இல் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே இவர்களை குறித்த முழுவிபரம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்