இதற்கு மட்டும் நாங்கள் தேவையா? நமிதாவிற்காக போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது எலிமினேஷன் ரவுண்டை நோக்கி முன்னேறி வருகிறது. பொதுவாகவே ரியாலிட்டி ஷோக்களில் வெற்றியாளரை தேர்ந்தெடுப்பது மக்கள்தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல் மக்களின் வாக்கினை வைத்து வெற்றியாளரை தீர்மானிப்பர்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி எலிமினேசன் ரவுண்டிற்கு நாமினேட் செய்து வருகின்றனர். நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு மக்களும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் நெட்டிசன்களின் தரப்பிலிருந்தும் பலவிதமான கேள்விகளும், மிக பயங்கரமான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஏனெனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் பங்கேற்றிருந்தனர். அதில் நமிதா மாரிமுத்து என்கின்ற திருநங்கை சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார். இவரை வெளியேறியதற்கான காரணத்தை உலகநாயகன் கமலஹாசன் இதுவரை கூறவில்லை.

பிக்பாஸ் தொடர்ந்து நமிதா விஷயத்தில் அமைதி காப்பது ஏன்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் எலிமினேஷன் டவுண்டிற்காக மக்களை ஓட்டு போட வேண்டாம் என்றும் இதற்கு மட்டும் நாம் தேவையா? என்றும் நெட்டிசன்கள் கேட்கின்றனர். இவர்களின் கேள்வி நியாயமாக இருப்பதால் தற்போது ரசிகர்களும், பொது மக்களும் நமிதாவின் நிலை பற்றி அறிய விரும்புகின்றனர்.

நமிதா மாரிமுத்து ஒரு வசதியான வீட்டை சேர்ந்த திருநங்கை ஆவார். இவர் மாடல் நடிகையாக பணிபுரிந்து வந்தவர். தன்னைப் போன்று இருக்கக்கூடிய திருநங்கைகளை யாரும் புண்படுத்தி விடக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்று திருநங்கைகளுக்கு பெருமை சேர்ப்பேன் என்று உறுதியாக கூறியவர்.

அத்துடன் திருநங்கைகள் அனைவரும் பொதுவாக படுகின்ற கஷ்டங்களை மக்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டபோது, அனைவருமே வருத்தத்தில் ஆழ்ந்தனர். அதற்கு பிறகு நமிதாவின் நடவடிக்கையால் பார்வையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். நமிதா டைட்டில் வின்னர் ஆவார் என்று ரசிகர்கள் நம்பி வந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு திடீரென்று நமிதா வெளியேற்றப்பட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்