கலாஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவு கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

இப்போது மிகப்பெரிய பேசு பொருளாக மாறிய விஷயம் என்னவென்றால் கலாஷேத்ரா கல்லூரியை பற்றியதுதான். அதாவது இந்த கல்லூரியில் பெண்கள் உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் இந்த கல்லூரியில் முன் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பலர் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவியான பிக் பாஸ் பிரபலம் ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் பேசி உள்ளார். அவர் கூறுகையில் தனது கல்லூரியைப் பற்றியும், கல்லூரி இயக்குனர் ரேவதியை பற்றியும் சில விஷயங்களை பேசி உள்ளார்.

Also Read: 1200 எபிசோடுகளை கடந்த சூப்பர் ஹிட் சீரியல்களை ஊத்தி மூடிய விஜய் டிவி.. ஏப்ரலில் அடுத்தடுத்து நிறைவடையும் 4 சீரியல்கள்

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பல சர்ச்சையில் அபிராமி சிக்கி உள்ளார். மேலும் பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தின் காரணமாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து சில பட வாய்ப்புகளும் அவருக்கு வந்த வண்ணம் உள்ளது.

இந்த சூழலில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அபிராமி 89 ஆண்டுகளாக இந்த கல்லூரி செயல்பட்டு வருவதாகவும், நாங்களும் இங்கு தான் படித்ததாக கூறியிருந்தார். இது போன்ற ஒரு விஷயம் இங்கு நடக்கவில்லை என்றும், வேண்டுமென்றே சிலர் அவதூறாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.

Also Read: பிக் பாஸ் ஆல் தலைக்கு ஏறிய ஆணவம்.. ஜெயித்த பின் சினிமா கேரியரை கோட்டை விட்ட ஹீரோ

மேலும் இந்த கல்லூரியின் இயக்குனர் ரேவதி இப்போது தான் பணியில் அமர்ந்துள்ளார். ஆனால் பத்து வருடங்களாக இவ்வாறு நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இப்படி இருக்கையில் ரேவதி இடம் எந்த கருத்தும் கேட்காமல் அவரை குற்றம் சாட்டுவது மிகவும் தவறான ஒன்று. மேலும் மாணவர்களும் உண்மை தெரியாமல் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என அபிராமி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அபிராமி தான் படித்த ஒரு கல்லூரியில் எந்த மரியாதையும் கொடுக்கவில்லை என பேசிய வீடியோவை ரசிகர்கள் பதிவிட்டு அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். மேலும் உங்களுக்கு வந்தா ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என கலாய்த்து தள்ளுகிறார்கள்.

Also Read: 10 பட வாய்ப்பை வேண்டாம் என உதறிய சூரி.. அஸ்வினை போல் வாயை விட்டு மாட்டிக்கிட்டியே பங்கு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்