ஓவர் பேச்சால் பல்பு வாங்கிய பாவனா.. இருந்தாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி!

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கன்னட மொழியில் பாவனா நடித்த முதல் படத்தை தயாரித்த நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த பாவனா 99 படத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் கன்னட ரீமேக் 99 ஆகும்.

96 படத்தில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் பாவனா நடித்திருந்தார். இவர் நான்கு மொழி படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். இதுவரைக்கும் பாவனா, அவர் நடித்த படங்களில் ஒரு படத்தைக்கூட பார்க்கவில்லையாம்.

அதற்கு என்னதான் காரணம் என்று கேட்டால், தென்னிந்திய நான்கு மொழிகளிலும் எனக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் வித்தியாசமானவை. அந்த கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளேன் அதனால் என்னுடைய படங்களை நான் பார்ப்பதில்லை என கூறியுள்ளார்.

தவறு என்பது இயல்பு. நாம் முதல் படத்தில் செய்த தவறை அடுத்த படத்தில் செய்யக்கூடாது என பல நடிகர், நடிகைகள் கவனமாக இருப்பார்கள். தன்னுடைய முந்தைய படங்களை பார்த்தால்தான் நம்முடைய வளர்ச்சி தெரியும்.

அதுமட்டுமல்லாமல் சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பலரும் படாதபாடு படுகிறார்கள். ஆனால் பாவனா தன்னுடைய படம் நல்லா இருக்கிறதா என்று கூட அவர் பார்க்க மாட்டாராம். அவருடைய படத்தை அவரே பார்க்காத போது ரசிகர்கள் எப்படி பார்ப்பார்கள் என பலரும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்