பிரியாமணியால் பாரதிராஜாவிற்கு ஏற்பட்ட சறுக்கல்.. மீண்டும் எந்திரிக்கவே முடியாமல் விழுந்த அடி

தமிழ் சினிமாவில் பல உன்னத படைப்புகளையும் எதார்த்தமான திரைக்கதைகளையும் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்த பெருமைக்குரியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவரைப் பார்த்து இயக்குனராக ஆசைப்பட்டு மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு பட்டணம் வந்தவர்கள் பல பேர்.

இவர் பல இயக்குனர்களை தமிழ் சினிமாவிற்கு வளர்த்து விட்டு இருக்கிறார். இயக்குனர்களை மட்டுமல்லாது பல சினிமா நட்சத்திரங்களை வளர்த்து விட்டவர் பாரதிராஜா. இப்படிப்பட்ட பாரதிராஜாவிற்கு ஒரு கட்டத்தில் மக்கள் ஆதரவு கொடுக்காமல் படு தோல்வியை சந்திக்க வைத்தனர்.

Also Read: பாரதிராஜாவின் மருத்துவ செலவை கூட கட்ட முடியாமல் இருக்கும் குடும்பம்.. உதவிய பெரும்புள்ளி

அதாவது இயக்குனர் பாரதிராஜா 2004-ல் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஒன்றை இயக்கியுள்ளார். நல்ல கதை, சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் சுஜாதாவின் எழுத்து எல்லாம் அமைந்தும் அந்தப் படம் படு தோல்விப் படமாக அமைந்தது.

Also Read: கடைசி வரை பாரதிராஜாவால் இயக்க முடியாமல் போன நடிகை.. வாய்ப்பு கை நழுவிப் போன துரதிர்ஷ்டம்

பாரதிராஜா உட்பட பலரும் ஹிட் அடிக்கும் என்று நினைத்த அந்தப் படம் தான் ‘கண்களால் கைது செய்’. இது பாரதிராஜாவுக்கு பெரிய பிளாப் படமாக அமைந்தது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தார். படத்தில் கதாநாயகனாக வசீகரன் என்பவரும், கதாநாயகியாக பிரியாமணியும் நடித்த்தார்.

இவர்களுடன் இளவரசு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்தனர். இப்படி பலரை வைத்து ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைத்த பாரதிராஜாவிற்கு, பிரியாமணி கதாநாயகியாக நடித்த இந்த படம் படுதோல்வியாக அமைந்ததுடன் அவரை எந்திரிக்கவே முடியாத நிலைக்கு தள்ளிவிட்டது.

Also Read: பாரதிராஜாவின் மருத்துவ செலவை கூட கட்ட முடியாமல் இருக்கும் குடும்பம்.. உதவிய பெரும்புள்ளி

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -