பாரதிராஜா வாங்கிய 6 தேசிய விருது படங்கள்.. இப்ப வர மறக்கமுடியாத கள்ளிப்பால் கருத்தம்மா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவருமான பாரதிராஜா. இவரது திரைப்படங்களில் இது தனிப்பட்ட உணர்வுகள் உருவாகும். பாரதிராஜாவுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாது அதேபோல் அவரது திரைப்படங்களும் உணர்வுகளை கொட்டி தீர்த்து விடும்.

இவரின் முதல் திரைப்படம் 16 வயதினிலே, தமிழ் சினிமாவை 16 வயதுக்கு முன் 16 வயதினிலே படத்திற்கு பின் தமிழ் சினிமா என்று பிரிக்கலாம் அந்த அளவிற்கு பல மாற்றங்களை தமிழ் சினிமாவில் கொண்டு வந்தவர். இவரது திரைப்படங்களின் பெயர்கள் கவிதைகளாக பல விஷயங்களை சொல்லும் விதமாக அமைப்பார். பல இயக்குனர்கள் தேசிய விருதுகளை வென்று இருந்தாலும் இவர் வாங்கிய தேசிய விருதுகளின் பட்டியல் காணலாம்.

சீதகோகா சிலூகா: இந்த திரைப்படம் வெளியேற்றப்பட்டு 1982 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றது. இந்த திரைப்படம் தமிழில் கார்த்திக், ராதா நடித்த அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த திரைப்படம். ஆனால் தமிழுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை.

வேதம் புதிது: தமிழ் சினிமாவில் முக்கியமான திரைப்படமாக வேதம் புதிது திரைப்படம் திகழ்கிறது. 1988 சமூக பிரச்சனைகள், ஜாதி சம்பந்தமான சில விஷயங்களை அடிப்படையாக கொண்டது. இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளது ஒன்று சிறந்த திரைப்படம், மற்றொன்று எடிட்டிங்க்கு வழங்கப்பட்டது. இத்திரைப்படத்தில் சத்யராஜ், ராஜா, சரிதா, அமலா போன்றோர் நடித்திருப்பார்கள்.

கருத்தம்மா: பாரதிராஜா தன்னுடைய தாயின் பெயரில் வைக்கப்பட்டு பெண் சிசு கொலைகளை எதிராக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 1995 ஆம் ஆண்டு மூன்று தேசிய விருதுகளை பெற்றது. ஒன்று வைரமுத்துவிற்கும், பாடகி சொர்ணலதாவிற்கும், இயக்குனர் பாரதிராஜாவும் வழங்கப்பட்டது.

முதல் மரியாதை: தமிழ் சினிமாவில் என்றும் மறக்கமுடியாத அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து திரைப்படமாக முதல் மரியாதை அமைந்தது. இந்த திரைப்படத்தில் சிவாஜி, ராதா போன்ற நடிகர்கள் நடித்தார்கள். பாரதிராஜா இயக்கி தானே தயாரித்த இத்திரைப்படம் 1986ஆம் ஆண்டு இந்த படத்திற்கு சிறந்த பாடலாசிரிருக்காக வைரமுத்துக்கும், சிறந்த இயக்குனர் பாரதிராஜாக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.

காதல் பூக்கள்: முரளி, மனோஜ், பாரதிராஜா, பிரதிக்ஷா, சிந்து மேனன் உள்ளிட்டோர் காதல் பூக்கள் படத்தில் நடித்தனர். பல வருட இடைவெளிக்குப் பின் வெளிவந்த திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்தது.

அந்திமந்தாரை: இத்திரைப்படத்திற்கு 1997 ஆம் ஆண்டு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது. வசூல் ரீதியாக படம் தோல்வி அடைந்தது. இந்த திரைப்படத்திற்கு இசை ஏ ஆர் ரகுமான் என்பது குறிக்கத்தக்கது.