ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

80 வயதிலும் மகனை தூக்கி விடும் பாரதிராஜா.. புது அவதாரம் எடுத்த மனோஜ்

80களில் கிராமத்து மண்வாசம் மாறாத படைப்புகளை கொடுத்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, சமீப காலமாக நடிப்பிலும் ஆர்வம் காட்டுகிறார். இருப்பினும் 80 வயதான பாரதிராஜா மகன் மனோஜை தூக்கி விட வேண்டும் என அதிரடியாக முடிவெடுத்திருக்கிறார்.

இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் நடிகர் மனோஜ் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தில் லீட் ரோலில் பாரதிராஜா நடிக்க உள்ள நிலையில், புது முகங்களும் இணைந்து நடிக்கின்றனர்.

Also Read: கனவு படத்திற்கு வழி விடாத உடல்நிலை.. இதுதான் என் கடைசி படம் ஒரே போடாய் போட்ட பாரதிராஜா

வயது முதிர்ச்சியின் காரணமாக ஒரு சில படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த பாரதிராஜா, 80 வயதில் தன்னுடைய மகனை தூக்கி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.

படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் துவங்கும் என்றும், படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வையை மார்ச் 31ம் தேதி மணிரத்தினம் உள்ளிட்ட 10 முன்னணி இயக்குனர்கள் வெளியிட உள்ளனர். மேலும் பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ், முதன்முதலாக இயக்குனராக அவதாரம் எடுத்தது மட்டுமின்றி தந்தையையும் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்ததை குறித்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Also Read: 80 வயதிலும் கனவை நினைவாக்கிய பாரதிராஜா.. நடிப்பையும் தாண்டி விதை தூவிய இயக்குனர் இமயம்

மேலும் மனோஜ் பம்பாய் படத்தில் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மனோஜ் மட்டுமல்ல பாரதிராஜாவும் மீண்டும் படம் இயக்க இருக்கிறார். கடைசியாக ‘மீண்டும் ஒரு மரியாதை’ என படத்தை இயக்கினார்.

அதன்பிறகு பாரதிராஜா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை இயக்கி நடிக்கிறார். தேனி பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு ‘தாய் மெய்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை விரைவில் முடித்துவிட்டு மனோஜ் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

Also Read: 42 படங்களில் ரெண்டே படம் தான் சொந்தமான கதையில் இயக்கிய பாரதிராஜா.. அப்ப அவரு ஜெயிச்சது எப்படி தெரியுமா?

- Advertisement -

Trending News