நடிப்பு வரலைன்னு நடிகையை கன்னத்தில் அறைந்த பாரதிராஜா.. இதே மாதிரி உங்க பையனை திருத்தி இருக்கலாமே!

மண் மணம் மாறாத கிராமத்து கதைகளை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளன.

பெரும்பாலும் அவர் புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து படம் எடுப்பது வழக்கம். இந்த வகையில் இவர் அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகள் அனைவரும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நிலையில் இருந்து வருகின்றனர். அப்படி அவர் அறிமுகப்படுத்திய ஒரு நடிகைதான் பிரியாமணி.

பொதுவாக பாரதிராஜா ஒரு படம் எடுக்கிறார் என்றால் அந்த படத்தில் நடிக்கும் நடிகைகள் கட்டாயம் அவரிடம் அடி வாங்கி விடுவார்கள். ஏனென்றால் பாரதிராஜா மிகவும் கோபக்காரர், நன்றாக நடிக்கவில்லை என்றால் உடனே சம்பந்தப்பட்டவர்களை அடித்து எப்படியாவது நடிக்க வைத்து விடுவார்.

அதனால்தான் அவர் இயக்கத்தில் நடித்த நடிகைகளின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. சினிமாவில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளாக இருந்த ராதிகா, ராதா போன்ற நடிகைகள் கூட பாரதிராஜாவிடம் அடி வாங்கி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவரிடம் அடிவாங்கி நடித்தால் அந்த நடிகைகள் சினிமாவில் பிரபலம் அடைவார்கள் என்ற ஒரு ராசியும் இருந்ததாம். அந்த வகையில் நடிகை பிரியாமணி, பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கும் போது பலரும் இந்த விஷயத்தை அவரிடம் கூறியிருக்கிறார்கள். தன முதல் பட அனுபவத்தை பற்றி அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதாவது நான் பாரதிராஜாவிடம் அடி வாங்காமல் நடிக்கணும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் கடைசியாக நான் நல்லா நடிக்கலைன்னு சொல்லி என்னை அவர் அடிச்சிட்டார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு தான் எனக்கு பருத்திவீரன் திரைப்படத்தில் ஒரு நல்ல கேரக்டர் கிடைத்தது.

அந்தப்படமும் வெற்றி அடைந்து எனக்கு தேசிய விருது கிடைத்தது. பலரும் சொல்வது போல் அவரிடம் அடி வாங்கிய ராசி தான் எனக்கு இவ்வளவு பேரும், புகழும் கொடுத்தது என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி நடிகைக்கான திறமையை வெளிக்கொண்டு வருவதில் பாரதிராஜாவை மிஞ்சும் அளவிற்கு யாரும் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் தனது வாரிசான மனோஜை இப்படி அடித்து இருந்தால் கண்டிப்பாக அவரும் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து இருக்கலாம், ஆனால் அவரை திருத்துவதற்கு நேரமில்லை போல!

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -