சீக்ரெட்டை சுக்கு நூறாக உடைத்து ஜெயித்துக் காட்டிய பாக்கியராஜ்.. லோகேஷ் கொஞ்சம் இவர் கிட்ட இருந்து கத்துக்கோங்க

Bhakkiyaraj and Lokesh: காலத்துக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஏற்ப தற்போது வெளிவரும் படங்கள் அனைத்தும் சீக்ரெட் ஆகவும் அதில் யார் என்ன கேரக்டரில் நடிக்கிறார்கள் என்பதை மறைமுகமாக வைத்து படத்தை எடுத்து வருகிறார்கள். அதிலும் லோகேஷின் படம் என்றால் படம் பார்க்கும் வரை எந்த ஒரு விஷயமும் தெரியாத அளவிற்கு சீக்ரெட் ஆக கொண்டு வருவார்.

அதாவது சஸ்பெண்ட் நிறைந்த காட்சிகளை காட்டப்பட்டால் ரசிகர்களிடம் நிறைய கைத்தட்டல்களை பெற முடியும். அத்துடன் பார்க்கும் பொழுது விறுவிறுப்பாகவும் அமையும் என்ற காரணத்திற்காக இதே யுத்தியை லோகேஷ் எல்லா படத்திலும் ஃபாலோ பண்ணி வருகிறார். அதே மாதிரி தான் லியோ படத்தையும் ரொம்ப சீக்ரட்டாக வைத்து இன்று ரிலீஸ் பண்ணி இருக்கிறார்.

இவர் படங்களைப் பொறுத்தவரை எந்த அப்டேட்டுகளும் வெளியே வராது. ஆனால் இவருக்கு எதிர் மாறாக பாக்யராஜ் அந்தக் காலத்தில் அப்ப எடுக்கக்கூடிய படங்களை அப்பட்டமாக அப்படியே வெளியே விட்டுவிடுவார். அப்படித்தான் 1981 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, எழுதி, தயாரித்த படம் மௌன கீதம். இதில் இவரே ஹீரோவாகவும் நடித்திருப்பார்.

அப்படிப்பட்ட இப்படத்தின் கதையை ஒரு கட்டுரையாகவே ஒரு பத்திரிக்கை இதழில் வெளியிட்டு இருக்கிறார். ஆனாலும் இதை படித்த பிறகு கதையெல்லாம் தெரிந்தாலும் இந்த படத்தை தியேட்டர்களில் பார்த்து அமோக வரவேற்பை மக்கள் கொடுத்தார்கள். அதனாலேயே 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

அதாவது லோகேஷ் மாதிரி பொத்தி பொத்தி கதையை பாதுகாத்து ரிலீஸ் அன்று மட்டுமே உடைக்காமல், படத்தின் கதையை தயார் செய்த உடனேயே பத்திரிக்கையில் வெளியிட்டு அதன் பின் படத்தின் காட்சியை வடிவமைத்து திரையில் வெளியிட்டு சூப்பர் ஹிட் படமாக ஆக்கி இருக்கிறார் பாக்யராஜ் . இன்னும் சொல்லப் போனால் அந்த படத்தின் கதை தெரிந்த பிறகும் சில்வர் ஜூப்ளியாக கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் பாக்யராஜின் கதை திரைக்கதை எந்த அளவிற்கு இருந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. இந்த விஷயத்தை கண்டிப்பாக பாக்யராஜிடம் இருந்து லோகேஷ் கற்றுக்கொள்ள வேண்டும். என்னதான் வெற்றி இயக்குனராக தற்போது லோகேஷ் வந்தாலும் எல்லாத்தையும் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்