வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

80-களில் கமலை மிஞ்சிய சம்பளம் வாங்கிய பாக்யராஜ்.. டாப் 6 நடிகர்களின் சம்பள லிஸ்ட்

தமிழ் சினிமா என்பது எப்போதுமே இரண்டு துருவங்களைக் கொண்டது. தியாகராஜ பாகவதர்- பி யு சின்னப்பா, எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் என இது எப்போதுமே இரு துருவங்கள் ஆகத்தான் இருக்கும். இடையில் எத்தனை ஹீரோக்கள் வந்து போனாலும், வெற்றியடைந்தாலும் இது மட்டும் எப்போதுமே மாறாது. ஆனால் ஒரு சில ஹீரோக்கள் அவ்வப்போது வந்து இவர்களைப் பின்னுக்கு தள்ளியதும் உண்டு.

அப்படி எண்பதுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் மாஸ் மற்றும் கிளாசை காட்டி வளர்ந்து வந்த நேரத்தில், ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் கால் தடம் பதித்து மிகப் பெரிய வெற்றி அடைந்தவர் தான் பாக்யராஜ். இயக்குனர் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இருந்த இவர் சிறந்த இயக்குனராகவும் சிறந்த நடிகராகவும் வெற்றி அடைந்தார்.

Also Read: ரஜினியின் சினிமா கேரியருக்கு எண்டு கார்ட் போடும் லோகேஷ்.. வேற லெவலில் உருவாகும் சூப்பர் ஸ்டாரின் கடைசி படம்

ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவரும் தங்களை ஆக்சன் ஹீரோவாகவும், காதல் ஹீரோவாகவும் நிலை நிறுத்திக் கொண்டிருந்த நேரத்தில் போட்டிகளத்தில் குதிக்காமல் தனக்கான திரைக்கதையை அழகாக எழுதி. ஒட்டுமொத்த குடும்பப் பெண்களையும் தன் பக்கம் இழுத்தவர்தான் பாக்யராஜ். இவர் எண்பதுகளின் காலகட்டத்தில் உலகநாயகன் கமலஹாசனை விட அதிகமாக சம்பளம் வாங்கி இருக்கிறார்.

எண்பதுகளின் இறுதி காலகட்டம், 90களின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய ஆறு ஹீரோக்களின் லிஸ்ட்டை பிரபல பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதில் பாக்யராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு அடுத்தபடியாக அதாவது அந்த ஆறு ஹீரோக்களின் லிஸ்டில் இரண்டாவது இடத்தில் இருந்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்போதே நம்பர் ஒன் இடத்தில் தான் இருந்திருக்கிறார்.

Also Read: வயிறு குலுங்க சிரிக்க வைத்த ரஜினியின் 5 காமெடி படங்கள்.. மீசையை வைத்து தேங்காய்-வை படுத்திய பாடு

முதல் ஆறு வரிசையின் படி ரஜினிகாந்த், பாக்யராஜ், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் ஆகியோர் இருந்திருக்கின்றனர். இதில் ரஜினிக்கு 35 லட்சம் சம்பளம். அதே போல் பாக்கியராஜுக்கு 20 லட்சம், கமலஹாசனுக்கு 16 லட்சம், கேப்டன் விஜயகாந்த் 12 லட்சம், சத்யராஜ் 12 லட்சம், இளைய திலகம் பிரபு ஆறு லட்சம், மற்றும் நவரச நாயகன் கார்த்திக் ஐந்து லட்சம் சம்பளம் பெற்று இருக்கின்றனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஒரு டிவி நிகழ்ச்சியின் போது கமல்- ரஜினி- ஸ்ரீதேவி மூவரும் இணைந்து நடித்த திரைப்படங்களான மூன்று முடிச்சு மற்றும் 16 வயதினிலே போன்ற திரைப்படங்களில் இவர்கள் இருவரை விட சூப்பர் ஸ்டாருக்கு சம்பளம் குறைவு என்று குறிப்பிட்டு இருந்திருக்கிறார். அப்படி இருந்த சூப்பர் ஸ்டார் அதிலிருந்து பத்து வருடங்களுக்குள் நம்பர் ஒன் இடத்தில் சம்பளம் வாங்கி இருக்கிறார். மேலும் 16 வயதினிலே திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பாக்யராஜ் கமலை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தில் சம்பளம் வாங்கியிருக்கிறார்.

Also Read: ரஜினி குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தில் நடித்த 5 படங்கள்.. 90களில் வானவராயனாய் பல பெண்களைக் கவர்ந்த தலைவர்

 

 

- Advertisement -

Trending News