வில்லனை தாண்டி மிகக் கொடூரமாக நடித்துள்ள 7 பிரபலங்கள்.. ரசிகர்களை எரிச்சலடைய செய்த கதாபாத்திரங்கள்

பொதுவாகவே அனைத்து மொழி திரைப்படங்களிலும் கதாநாயகன், கதாநாயகி, காமெடியன், வில்லன் என பல கதாபாத்திரங்கள் ஒன்று சேர்ந்து, தங்களின் நடிப்பு திறமையை சரிவர வெளிப்படுத்தினால் மட்டுமே அந்த திரைப்படம் மெகாஹிட் திரைப்படமாக வலம் வரும்.

அவ்வாறான மெகாஹிட் திரைப்படங்களிலும் சில கதாபாத்திரங்கள் காண்போரை எரிச்சலடைய செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.  உதாரணமாக ‘போக்கிரி’ திரைப்படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரக்கூடிய அந்த கதாபாத்திரம் பான்பராக்கை மென்றுகொண்டு கதாநாயகியை தொல்லை செய்து வருமாறு வடிவமைத்து இருப்பார்கள். இதுபோன்ற கதாபாத்திரத்தை கண்டு ரசிகர்கள் கோபம் அடைந்தனர் என்றே கூறலாம்.

pokiri
pokiri

அதேபோல், ‘அங்காடித்தெரு‘ திரைப்படத்தில் வெங்கடேஷ் என்பவர் கருங்காளி என்ற கதாபத்திரத்தில் சூப்பர் வைசர் கேரக்டரில் நடித்திருப்பார். இவர் அங்கு பணிபுரியும் வேலையாட்களை படுத்தும் பாடு இருக்கிறதே, அது காண்போருக்கு அருவருப்பாக இருக்கும்.

angadi-theru-villain
angadi-theru-villain

அதேபோல் ‘அசுரன்‘ திரைப்படத்தில் வருகின்ற பாண்டியன் கதாபாத்திரம், கதாநாயகியை காலால் உதைக்கும் போது காண்பவர்களை கோபமடையச் செய்து இருக்கும்.

அவ்வாறே ‘பரியேறும் பெருமாள்‘ திரைப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் செய்த காரியங்கள் அனைத்தும் காண்போரை திகைக்க வைத்திருந்தாலும், எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும்.

pariyerum-perumal-villain
pariyerum-perumal-villain

மேலும் ‘மைனா‘ திரைப்படத்தில் வரக்கூடிய இன்ஸ்பெக்டரின் மனைவி கதாபாத்திரம் காண்பவர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தக்கூடிய கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது.

mynaa-cinemapettai

அத்துடன் ‘பேராண்மை‘ திரைப்படத்தில் நடித்திருந்த கணபதி ராம் (ரேஞ்சர்) கதாபாத்திரத்தில் நடித்திதிருக்கும் பொன்வண்ணன், கதாநாயகன் ஜெயம் ரவிக்கு கிடைக்கக்கூடிய அனைத்து அங்கீகாரத்தையும் அவரே பிடுங்கிக் கொள்வது படத்தை பார்த்தவர்களுக்கு வெறியேற்றும்.

Peraanmai-cinemapettai

இதேபோல் ‘விசாரணை‘ திரைப்படத்தில் வரக்கூடிய போலீஸ் அதிகாரி கதாபாத்திரம், கதாநாயகனை விசாரிக்கும் போது அவர் நடந்து கொள்ளும் விதம் காண்போரை மிகவும் பதைபதைக்க வைக்கும் கதாபாத்திரமாக இருக்கிறது.

visaranai-11
visaranai-11

இது போல பல திரைப்படங்களில் வருகின்ற சில கதாபாத்திரங்கள் காண்போருக்கு அருவருப்பை தருகிறது.

- Advertisement -