சினிமாவை தாண்டி பிசினஸில் கல்லா கட்டும் நயன்தாரா.. ஒரு வருடத்திற்கு இவ்வளவு கோடிகளில் வருமானமா?

ஹீரோவுக்கு இணையாக அதிகமான ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்ட நடிகை என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மட்டும்தான். இவருக்கேற்ற மாதிரி கதைகளை ரெடி பண்ணி இவரை நடிக்க வைப்பது தான் பல இயக்குனர்களின் கனவாக கூட இருக்கும். அந்த வகையில் ஹீரோயின் சப்ஜெக்ட் கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். அத்துடன் இவருடைய மிகப்பெரிய சிறப்பே இவர் எந்த படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் கண்டிப்பாக வெற்றி அடையும் என்பதுதான்.

அப்படிப்பட்ட இவர் தற்போது கல்யாணம், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையில் சென்றாலும் அதில் எப்படி சுமூகமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சரியாக குடும்பத்தை பார்த்து வருகிறார். இதனால் சினிமாவில் கொஞ்சம் கவனம் குறைந்ததால் மிகப்பெரிய வாய்ப்புகளை இழந்திருக்கிறார். அதனால் ஒரு சில படங்களில் மட்டும் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த படங்களும் எப்போது வெளிவரும் என்று உறுதியாக தெரியவில்லை.

Also read: துளியும் வருத்தம் இல்லாமல் மகிழ் திருமேனியை பாராட்டிய விக்னேஷ் சிவன்.. அஜித்துக்கு ஏகே 62 படம் வெற்றி தான் கொடுக்கும்

ஆனாலும் இவர் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் இருக்கிறார். அதற்கு காரணம் இவர் இதுவரை சினிமாவில் பெற்ற லாபத்தை எல்லாம் சரியான முறையில் பிசினஸில் முதலீடு செய்தது தான். அதாவது சினிமாவில் எப்பொழுதும் எல்லாருக்கும் ஒரே நேரமாக இருக்காது ஏற்றத்தாழ்வுகள் நமக்கு வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து சினிமாவில் கிடைத்த லாபத்தை பிளான் பண்ணி பல பிசினஸ்களில் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணியிருக்கிறார்.

அதில் முதலாவதாக துபாயில் எண்ணெய் சம்பந்தப்பட்ட தொழிலில் 50 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார். இதனை அடுத்து அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தில் “தி லிப் பாம் கம்பெனி” போன்ற தொழில்களில் ஈடுபட்டு அதன் பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார். இந்த நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.

Also read: மனைவியுடன் ஊர் சுற்றியவரை உருக்கமாக பாராட்டிய விக்னேஷ் சிவன்.. வியந்து பார்க்கும் திரையுலகம்

அடுத்ததாக இந்தியாவில் மிகப் பிரபலமான “சாய் வாலே” என்ற தேநீர் கடையில் முதலீடு செய்து உள்ளார். இது மட்டுமில்லாமல் இறைச்சி சம்பந்தமான ஒரு தொழிலிலும் முதலீடு செய்திருக்கிறார். இப்படி சினிமாவில் சம்பாதித்த அனைத்து லாபத்தையும் தெளிவான முறையில் எதிர்காலத்துக்காக பிசினஸில் இன்வெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார். இவர் முதலீடு செய்துள்ள அனைத்து தொழில்களிலும் உலக அளவில் மற்றும் இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற தொழில்கள்.

இதன் மூலம் நயன்தாராவுக்கு மாதம் 10 லிருந்து 15 கோடி வரை லாபம் வருகிறது. ஒரு வருடத்திற்கு மட்டுமே 100 கோடிக்கு மேல் சம்பாதித்து வருகிறார். சினிமாவையும் தாண்டி பிசினஸில் அதிக லாபத்தை பார்த்து வருகிறார். இதனாலையே சினிமாவைப் பற்றி தற்போது பெரிய அளவில் கவலைப்படாமல் இருந்து வருகிறார்.

Also read: நயன்தாராவின் அடுத்த 5 பிரம்மாண்ட படங்கள்.. ரெட்டை குழந்தைக்கு தாயாகியும் மார்க்கெட் குறையல

- Advertisement -