தத்துப் பிள்ளைக்கு கிடைத்த பெஸ்ட் ஆங்கர் விருது.. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் விஜய் டிவி

எப்பொழுதுமே சின்னத்திரை கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் அவர்களுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் தான் விருது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் 8 ஆம் ஆண்டு விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். இதில் இவர்களின் சேனலில் நடிக்கும் பல சீரியல்களின் நடிகர், நடிகைகள், காமெடி நடிகர்கள் மற்றும் பெஸ்ட் சீரியல் என்று பல விருதுகளை கொடுத்து இருக்கிறார்கள்.

அடுத்ததாக விஜய் டிவியை தூக்கி நிறுத்தும் விதமாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தான் ஏராளமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் அண்டாக்கசம், உ சொல்றியா, சூப்பர் சிங்கர், மிஸ்டர் மிஸஸ் சின்னத்திரை போன்ற பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இருக்கக்கூடியவர் தான் மாகாபா. இவர்தான் விஜய் டிவியின் ஆணிவேர் என்றும் சொல்லலாம் தத்துப் பிள்ளையும் என்று சொல்லலாம்.

Also read: படுக்கையறை காட்சிகளை வைத்து டிஆர்பியை ஏற்றும் விஜய் டிவி.. அக்கப்போரை கூட்டும் மட்டமான சீரியல்

அந்த அளவிற்கு விஜய் டிவியில் முழு நேரமாக இருக்கிறவர். இவருக்காகவே விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள் அதிகமானவர்கள். இவருடைய ஹியூமர் சென்சுக்கு அதிக பேன்ஸ் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட இவருக்கு விஜய் டிவி கொடுத்த பெஸ்ட் ஆங்கர் விருதுதான் விஜய் டெலிவிஷன் அவார்டு.

இது இவருடைய எட்டாவது அவார்டு. அப்படி என்றால் விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தொடர்ந்து இவர் மட்டுமே பெஸ்ட் ஆண் தொகுப்பாளர் என்ற விருதை தட்டி தூக்கி இருக்கிறார். அதனால் என்னமோ தான் விஜய் டிவி இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.

Also read: தளபதியை வைத்து டிஆர்பியை ஏற்றிய சன் டிவி.. கோட்டை விட்ட விஜய் டிவி

அதற்கேற்ற மாதிரி இவரும் மற்ற எந்த சேனலுக்கும் போகாமலும், படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் அதை மறுத்துவிட்டு விஜய் டிவியில் மூழ்கி விட்டார். அப்படிப்பட்ட இவர் தற்போது விருதை வாங்கின பிறகு இவருடைய பசங்களுக்கும் மனைவிக்கும் நன்றியை தெரிவித்து கொண்டு அவர் வீட்டில் இருக்கும் நாய்க்குட்டிக்கு முதற்கொண்டு டெடிகேட் பண்ணி இருக்கிறார்.

மேலும் விருது வாங்கின கையோடு அனைவரும் முன்னாடியும் மேடையில் இவர் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். அதாவது எவ்வளவோ நிகழ்ச்சிகளை நான் தொகுத்து வழங்கியிருந்தாலும் எனக்கு பிடித்தமான அது இது எது ப்ரோக்ராம் தான். அதனால் கூடிய விரைவில் அதை மறுபடியும் டெலிகாஸ்ட் பண்ணுவதற்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார். இதை கேட்ட அங்கு இருந்த அனைவரும் ஆரவாரத்துடன் கைதட்டி அவர்களுடைய எதிர்பார்ப்பை தெரிவித்திருக்கிறார்கள்.

Also read: 10 வயது வித்தியாசம், திருமணம் ஆகி 15 நாட்களில் விவாகரத்தான விஜய் டிவி ஜோடி.. பிரிவதற்கு அந்த நபர் தான் முழு காரணம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்