மணிவண்ணன் இயக்கத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 6 படங்கள்.

மணிவண்ணன் குணச்சித்திர நடிகராக தான் நமக்கு தெரியும், ஆனால் பல படங்களை இவர் இயக்கியுள்ளார். அரசியல்வாதிகளை தோலுரிக்கும் இவரின் கதைகள் மக்களால் வரவேற்கப்பட்டது. நடிப்பை தாண்டி, இயக்கத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார்.

மணிவண்ணன் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார், 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் இயக்கி பிரபலமான படங்களின் வரிசைகளை இப்போது பார்க்கலாம்.

1. நூறாவது நாள்

nooravathu-naal-full-movie-online
nooravathu-naal-full-movie-online

1984ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது நூறாவது நாள். மணிவண்ணன் இயக்கிய இந்த படத்தில் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பார். 5 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டதாக சத்யராஜுக்கு பெரும் வரவேற்ப்பை கொடுத்த படம்.

2. அமைதிப்படை

amaithipadai
amaithipadai

இன்று வரை ரசிகர்களால் போற்றப்பட கூடிய முக்கியமான படம் அமைதிப்படை. அரசியல்வாதியின் உண்மையான முகத்தை தோலுரிக்கும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சத்யராஜ் அரசியல்வாதியாக நடித்திருப்பார், முக்கியமான கதாபாத்திரத்தில் மணிவண்ணன், ரஞ்சிதா, சுஜிதா, கஸ்தூரி ஆகியவர்கள் நடித்திருப்பார்கள். சத்யராஜ் இரட்டை கதாபாத்திரத்தில் அப்பாவாகவும், மகனாகவும் நடித்திருப்பார்.

இந்த படத்தில் சத்யராஜ் அம்மாவாசை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அரசியல்வாதியாக மணிவண்ணன், பின் மணிவண்ணனை கீழே தள்ளிவிட்டு எப்படி அரசியல்வாதியாக மறுக்கிறார் என்பதை தத்ரூபமாக இயக்கி இருப்பார் மணிவண்ணன். 100 நாட்களையும் தாண்டி இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை மையமாக நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ என்ற பெயரில் மீண்டும் 2013 ஆம் ஆண்டு இரண்டாம் பாகம் எடுத்தனர். அதுவும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

3. ஜல்லிக்கட்டு

jallikattu
jallikattu

முதல் முறையாக சிவாஜி கணேசன் மற்றும் மணிவண்ணன் இணைந்த படம் ஜல்லிக்கட்டு. இந்த படத்தில் சிவாஜிகணேசனுடன் சேர்ந்து சத்யராஜ், ராதா, நம்பியார் ஜனகராஜ், வெண்ணிறாடை மூர்த்தி, போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மிக அற்புதமாக இசை அமைத்திருப்பார். இந்த படம் 100 நாட்களை தாண்டி ஓடியது குறிப்பிடத்தக்கது.

4. 24 மணி நேரம்

24 mani neram movie
24 mani neram movie

சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த திரைக்கதையை இயக்கி வெற்றி கண்ட படம் 24 மணி நேரம். இந்த படத்தின் காட்சிகள் மிக அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கும், இந்த படத்தில் மோகன், சத்யராஜ், நளினி, ஜெய்சங்கர் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இசைஞானி இளையராஜாவின் இசை இந்தப் படத்திற்கு வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் என்று கூறலாம். சில வருடங்களுக்கு பிறகு இந்த படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

5. சின்னதம்பி பெரியதம்பி

chinna-thambi-peria-thambi
chinna-thambi-peria-thambi

மணிவண்ணன் இயக்கத்தில் 150 நாட்களை தாண்டி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் சின்னதம்பி பெரியதம்பி. இந்த படத்தில் சத்யராஜ், பிரபு இருவரும் சேர்ந்து நதியாவை காதலிப்பார்கள். இந்த படத்தின் வெற்றியை வைத்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. பிரபு. சத்யராஜ் இணைந்து காமெடியில் கலக்கியிருப்பார்கள்.

6. மூன்றாவது கண்

moondravathu kann
moondravathu kann

1993 ஆம் ஆண்டு த்ரில்லர் படமான மூன்றாவது கண் படத்தை மணிவண்ணன் இயக்கினார். முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார், நிழல்கள் ரவி, ராஜா மோனிஷா, மன்சூரலிகான் நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு தேவா இசை அமைத்துருப்பர், வித்தியாசமான கோணங்களில் கதைகளை இயக்கி வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துக் காண்பித்தார் மணிவண்ணன்.

இப்படி தமிழ் சினிமாவில் இன்றளவும் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் படங்களின் வரிசையில் மணிவண்ணன் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார், இங்கே கொடுக்கப்படுள்ள வீடியோக்களை பார்த்து இந்த லாக் டவுன் சமயத்தில் நேரத்தை செலவிடுங்கள்.

- Advertisement -