அருள்நிதிக்கு நல்ல பெயர் சம்பாதித்துக் கொடுத்த 5 படங்கள்.. திருப்புமுனை தந்த டிமான்டி காலனி

சினிமா பின்புலத்தில் இருந்து வந்தவர் தான் நடிகர் அருள்நிதி ஸ்டாலின். இவருடைய முதல் படமே நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன்பிறகு அருள்நிதி படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மீண்டும் வெற்றிப்படத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளார். அவ்வாறு அருள்நிதிக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்த 5 படங்களைப் பார்க்கலாம்.

மௌனகுரு : சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி, இனியா நடிப்பில் 2011 இல் வெளியான திரைப்படம் மௌனகுரு. இப்படத்தில் கருணாகரன் என்ற கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்து இருந்தார். ஒரு அதிகார வர்க்கம் நினைத்தால் சாமானிய மக்களை எவ்வளவு துன்புறுத்த முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டியிருந்த படம் மௌனகுரு. இப்படம் நேர்மையான விமர்சனங்களை பெற்று இருந்தது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் : மாறன் இயக்கத்தில் அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். த்ரில்லரான கதைக்களத்துடன் அமைந்த இப்படத்தில் பரத் என்ற கதாபாத்திரத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அருள்நிதி.

டிமான்டி காலனி : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த் அபிஷேக் ஜோசப் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. நாலு நண்பர்கள் ஒரு பங்களாவுக்கு சென்று வந்த பின்பு அவர்களுக்குள் நடக்கும் மாயையே இப்படத்தின் கதை. அருள்நிதிக்கு இது போன்ற திரில்லர் படங்கள் தொடர்ந்து கைகொடுத்து வருகிறது.

ஆறாது சினம் : மலையாள படமான மெமரீஸ் படத்தின் ரீமேக்தான் ஆறாது சினம். அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அருள்நிதி தனது மனைவி, குழந்தையின் இறப்புக்குப் பின்பு குடிக்கு அடிமை ஆகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இருந்து குற்றங்களை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை.

வம்சம் : அருள்நிதியின் முதல் படமாக இருந்தாலும் வம்சம் படத்தில் கிராமத்து சாயலில் கனகச்சிதமாக பொருந்தி இருந்தார். அவருக்கு ஜோடியாக இப்படத்தில் சுனைனா நடித்திருந்தார். பாசம், காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த வம்சம் படம் அருள்நிதிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

- Advertisement -spot_img

Trending News