காமெடியில் அசத்திய கமலின் 5 படங்கள்.. பட்டித் தொட்டி எங்கும் பட்டைய கிளப்பிய சண்முகி

Actor Kamal: எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமை கொண்டவர் உலக நாயகன் கமலஹாசன். தமிழ் சினிமாவில் இவர் மேற்கொண்ட அனுபவத்திற்கு முன்பு யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு காமெடி படங்களையும் விட்டு வைக்காது நடித்து அசத்திருப்பார். அதற்கு காரணமாய் இருந்த இயக்குனர் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

எந்த கதாபாத்திரம் ஆயினும் அதற்கு தகுந்த நடிப்பினை வெளிக்காட்டும் தன்மை கொண்டவர் கமல். அவ்வாறு இன்றும் இளம் நடிகர்களுக்கு சவாலாய் தன் அடுத்த கட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் இயற்கையாகவே ஹியூமர் சென்ஸ் இருப்பதை அறிந்து கொண்டு சீரியஸ் படங்களில் நடித்த இவரை காமெடி ரூட்டிற்கு மாற்றியவர் கே எஸ் ரவிக்குமார்.

Also Read: பேராசையில் 10 பைசா வாங்காமல் நடித்துக் கொடுத்த சந்தானம்.. தயாரிப்பாளர்களை வச்சு செய்யும் சம்பவம்

நம்மவர், இந்தியன், குருதிப்புனல் என ஒரே சீரியஸான படங்களை நடித்து வந்த வேலையில், கொஞ்ச நாட்கள் காமெடி ட்ராக் செய்வோம் என கமலை அழைத்தார் கே எஸ் ரவிக்குமார். அதைத் தொடர்ந்து மேற்கொண்ட படம் தான் அவ்வை சண்முகி.

தமிழ் சினிமாவில் மாபெரும் படைப்பாய் பார்க்கப்பட்ட படங்களில் அவ்வை சண்முகியும் ஒன்று. இப்படத்தில் மீனா, ஜெமினி கணேசன், கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து மக்களிடையே மாபெரும் விமர்சனத்தை பெற்றனர்.

Also Read: மாமன்னனில் தண்டத்துக்கு வந்து போன கீர்த்தி சுரேஷ்.. வசனமே இல்லாமல் ஸ்கோர் செய்த கேரக்டர்!

அவ்வாறு பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த காமெடி படங்களாகவே கொடுத்து ஹிட் அடித்து வந்தார் கமல். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கே எஸ் ரவிக்குமார். இவர்கள் இருவரின் கூட்டணியில் தான் இப்படங்கள் ஹிட் கண்டன.

அதிலும் குறிப்பாக பெண் வேடம் ஏற்று நடித்த அவ்வை சண்முகி வேற லெவலில் ரீச் ஆனது. மேலும் தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம், மன்மதன் அன்பு போன்ற படங்களில் கமலின் நகைச்சுவை பெரிதாக பேசப்பட்டது. இவை அனைத்துமே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, வணிக ரீதியாய் வெற்றி கண்ட படங்கள் ஆகும்.

Also Read: விஜயகாந்துடன் நடிக்க மறுத்த பிரபலம்.. மொத்தமாய் ஸ்கோர் செய்த பிரபுதேவா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்