பீஸ்ட் சாதனையின் கிட்ட கூட வராத வலிமை, எதற்கும் துணிந்தவன்.. மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்

சமீபகாலமாக ஒலிம்பிக் சென்று தங்கம் வென்று சாதனை படைப்பதை விட சமூக வலைதளங்களில் தங்களுடைய நடிகர்களின் படங்கள் எவ்வளவு பார்வையாளர்களை பெற்றுள்ளது, எவ்வளவு லைக்குகளை குவித்துள்ளது போன்ற சாதனைகள்தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், சூர்யா போன்ற ரசிகர்களுக்கு இவர்களின் ஒவ்வொரு படங்களின் அறிவிப்பு வெளியாகும்போதும் கொண்டாட்டம் தான்.

அதற்கு முன்னர் இந்த மூன்று நடிகர்களின் படங்களின் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் எவ்வளவு லைக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது என்பதை கணக்குப் போட்டு அதை முறியடிக்கும் நோக்கத்தில் செயல்படுவார்கள்.

அப்படித்தான் இந்த மூவரில் விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. தற்போது வரை பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 317.5K லைக்குகளையும், செகண்ட் லுக் போஸ்டர் 276.6K லைக்குகளையும் குவித்துள்ளது.

அதன் பிறகு வெளியான தல அஜித்தின் வலிமை பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வரை 69.6K பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. அதேபோல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் 48.8K, மூன்றாவது லுக் போஸ்டர் 36.1K முறையே லைக்குகளை குவித்துள்ளது.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அஜித்தின் வலிமை போன்றவை முதலில் போஸ்டர்களாக வெளியிடப்படாமல் மோஷன் போஸ்டர் வீடியோவாக வெளியானது குறிப்பிட வேண்டிய ஒன்று. இருந்தாலும் விஜய்யின் போஸ்டர்கள் கிட்ட கூட வர முடியவில்லை என தளபதி ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -