பாகுபலிக்கே சவால் விடும் தளபதி விஜய்.. ஆனா எல்லாத்துக்கும் இந்த நெல்சன் தான் காரணம்

சமீபகாலமாக தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்திற்கு முன்னேறி வருகிறது. அதிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அனைத்தும் புது புது டெக்னாலஜி களை கொண்டு பல்வேறு புதுமைகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படமும் இணைந்துள்ளது. தமிழில் இதற்கு முன்பு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 2.o திரைப்படம் பல கோடி செலவில் அனைவரும் வியக்கும் வகையில் எடுக்கப்பட்டது.

பல புதுமையான தொழில் நுட்பங்களுடன் உருவான அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம் பல கோடி செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படமும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தற்போது கோலிவுட்டின் நான்காவது பெரிய பட்ஜெட் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

முன்னணி நடிகர்களை வைத்து பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடியை நெருங்கியுள்ளது. இதுக்கு உண்மை காரணம் நெல்சன் தான். படத்தின் பட்ஜெட்டை ஒரு வழியா ஏதோதோ பண்ணி ஏத்தி விட்டாராம்.

மேலும் இதுவரை விஜய் நடித்த திரைப்படங்களிலேயே இந்த திரைப்படம் தான் இவ்வளவு பிரம்மாண்டமாகவும், அதிக பொருட் செலவிலும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியை தற்போது விஜய்யின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை