கோலமாவு கோகிலா போலவே பீஸ்ட் படமும் அட்ட காப்பியா.? நெல்சன் ரொம்ப ஹாலிவுட் படம் பார்ப்பார் போல.!

தமிழ் சினிமாவின் கொடிகட்டிப் பறக்கும் இளைய தளபதி விஜய்க்கு தமிழகத்தின் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உள்ளது. இவருடைய படங்கள் வெளிவந்தால் திரையரங்கமே காலம் போல் காட்சியளிக்கும். இந்த நிலையில் தளபதி விஜயின் 65-வது படமான பீஸ்ட்  படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பீஸ்ட் படம், யோகி பாபு நடிப்பில் வெளிவந்த கூர்கா படத்தை மாதிரியே இருக்கும் என்று பீஸ்ட் படத்தில் நடித்த துணை நடிகர் ஒருவர் கூறியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

அத்துடன் கூர்க்கா படமே பிரபல ஹாலிவுட் திரைப்படமான மால் காப் என்ற படத்தின் காப்பி தான் என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் மால் காப் திரைப்படம் முழுவதும் மால் ஒன்றில் தான் முழு படமும் படமாக்கப்பட்டது.

அதைப்போன்றே பீஸ்ட் படத்தின் முக்கிய காட்சிகளும் மால் போன்ற செட்டில் தான் எடுக்கப்படும் என்பதால் இதுபோன்ற வதந்தி கிளம்பியுள்ளது. முன்பெல்லாம் மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்களை அப்படியே காப்பி அடித்த தமிழ் சினிமா தற்போது ஹாலிவுட் திரைப்படத்தையும் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படம் பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‘வீ ஆர் தி மில்லர்ஸ்’ என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டது என சொல்லப்பட்ட நிலையில் தற்போது நெல்சன் இயக்கிக் கொண்டிருக்கும் பீஸ்ட் படத்திற்கும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

beast-kevin
beast-kevin

எனவே இளைய தளபதி விஜயின் பீஸ்ட் படம் வெளியில் வரும் பொழுது தான் இந்த வதந்தி உண்மையா? பொய்யா? என தெரிய வரும். இருப்பினும் இந்த தகவலை கேட்டதும் தளபதி ரசிகர்கள் பதறிப் போயினர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்