பீஸ்ட் வசூலுக்கு மொத்தமும் ஆப்பு.. இந்த வாட்டி 200 கோடி வருவதே பெருசுதான்!

விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகி வருகிறது பீஸ்ட். இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 2022ஆம் ஆண்டு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு களமிறங்க உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்றாலும் விஜய்யின் படம் பொங்கலுக்கு வருவது உறுதி.

விடுமுறை தினத்தில் வெளியிட்டால் செம லாபம் பார்த்து விடலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் போட்டு வைத்திருந்த மிகப்பெரிய பிளானுக்கு ஆப்பு வைக்கும் வகையில் பக்கத்து மாநில முன்னணி நடிகர்கள் அவர்களது பட ரிலீசை அறிவித்துள்ளனர்.

விஜய்க்கு சமீபகாலமாக தெலுங்கு சினிமா மார்க்கெட் மெல்ல மெல்ல உச்சத்தை தொட்டு கொண்டிருக்கிறது என்பது அறிந்ததே. அதுவும் கடைசியாக வெளியான பிகில், மாஸ்டர் போன்ற படங்கள் கிட்டத்தட்ட 20 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

அந்த வகையில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படத்தை வைத்து 50 கோடியை வசூல் செய்து விட வேண்டும் என ஐடியா போட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பட்டா, பிரபாஸின் ராதேஷ்யாம், பவன் கல்யாண் நடிக்கும் அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் போன்ற படங்களும் சங்கராந்தி விடுமுறையில் வெளியாக உள்ளது.

தமிழில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் போலவே ஆந்திராவில் ஜனவரி 14-ஆம் தேதி சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் அங்கேயும் விசேஷம் தான் என்பதால் அக்கட தேச முன்னணி நடிகர்கள் பலரும் ஒரே நேரத்தில் களமிறங்கியுள்ளனர். இதனால் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கில் விஜய் படம் அடி வாங்கினால் கண்டிப்பாக அவருடைய மொத்த வசூலில் 200 கோடியை தாண்டுவதே பெரிய விஷயம் தான் என்கிறது சினிமா வட்டாரம்.

beast-vijay-cinemapettai-01
beast-vijay-cinemapettai-01
- Advertisement -