பிசிசிஐ போட்டுள்ள புதிய 10 கட்டுப்பாடு.. ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கும் இனி சிறைவாசம் தான்

2021கான ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதியிலிருந்து மே 30-ஆம் தேதி வரை நடக்க உள்ளது. சென்னை பெங்களூரு போன்றஆறு இடங்களில் ஐபிஎல் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளது .

கிட்டத்தட்ட ஒன்பது அணிகள் பங்கு பெறக்கூடிய ஐபிஎல் போட்டிஎன்றுமே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெறக் கூடியது. தற்போது நடக்கக்கூடிய ஐபிஎல் போட்டியில் கொரோனா பாதுகாப்பிற்காக புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன.

ipl 2020

ஒன்று – குடும்ப உறுப்பினரும், அணியின் தலைவரும் தனிமைப்படுத்துதல்.

இரண்டு – அணியினர் தங்கியிருக்கும் ஹோட்டலில் ஒரு பகுதியை அவர்களுக்கு என்று ஒதுக்கி சீல் வைப்பது.

முன்று – ஒவ்வொரு அணியினருக்கும் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான விதிமுறைகளை எடுத்து கூறுவதற்கும் அவற்றை மீறாமல் பாதுகாத்துக் கொள்வதற்கும்.

நான்கு – வெளிநாட்டு வீரர்களுக்கு கட்டாயமாக ஏழு நாட்கள் தனிமைப்படுத்தல் அமல்படுத்தப்படுகிறது, அதுவும் அவர்களின் சொந்த செலவில்.

ஐந்து – ஸ்டேடியத்திற்கு வெளியே விழும் பந்துகளை உடனடியாக மாற்றிவிட்டு அதை சானிடைஸ் பண்ணியவுடன் திரும்பவும் உபயோகத்திற்கு கொண்டு வரப் போகிறார்கள்.

அறு – இந்தியா ,இங்கிலாந்து தொடர் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் ஏற்கனவே பாதுகாப்பு வளையத்திற்குள் விளையாடியதால் அவர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை.

ஏழு – சென்னையில் இருந்து வரக்கூடிய வீரர்கள் தனியாக தமிழ்நாட்டு அரசிடம் இருந்து சிறப்பு இ பாஸ் பெறப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

எட்டு – ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பவர்கள் மூன்று விதமான பி சிஆர் சோதனைக்கு உட்பட்டு,நெகட்டிவ் ரிசல்ட் வந்த பிறகே விளையாட அனுமதிக்கப்படுவார்.

ஒன்பது – பிசிசிஐ வட்டாரத்திலிருந்து யாரையும் சந்திக்க வீரர்களுக்கும்,பிசிசிஐ நிர்வாகிகளுக்கும் அனுமதி கிடையாது.

பத்து – வீரர்கள் தனியாக வந்து செல்வதற்கு ஹோட்டலில் அவர்களுக்கென்று சிறப்பு பாதைகள் அமைக்கப்படும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்