வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

எங்களுக்கு ஒரு நியாயம், அவருக்கு ஒரு நியாயமா.? விராத் கோலியை நீக்க கொடி பிடிக்கும் முன்னாள் வீரர்

எல்லாருக்கும் கெட்ட நேரம் வரும் ஆனால் இப்பொழுது கெட்ட நேரம் குடிகொண்டிருக்கும் இடம் என்றால் அது விராத் கோலியிடம்தான். சமீபத்தில் அவரிடமிருந்து கேப்டன் பதவி பறிபோனது. அதுமட்டுமின்றி பதவி போன கையோடு அணியிலிருந்தும் சிறிதுகாலம் ஓரங்கட்டப்பட்டார்.

ஒரு காலத்தில் இந்தியாவின் ரன் மெஷின் என வர்ணிக்கப்பட்ட விராட் கோலி, இப்பொழுது சில காலமாகவே ரன்கள் அடிப்பதற்கு பெரிதும் திணறி வருகிறார். அவருடைய சமீபகால ஆட்டத்திறன் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. இப்படியே போனால் அவரை ஒரேடியா அணியில் இருந்து ஓரங்கட்ட நேரிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

இதே போன்று இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 2வது மற்றும் 3வது டி20 போட்டியில் 1 ரன் மற்றும் 11 ரன்னில் விராட் கோலி அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஏற்கனவே வருங்கால இந்திய அணியை கட்டமைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது தேர்வுக்குழு. விராத் கோலியின் இந்த பரிதாப நிலைமை தொடருமானால் அவரின் இடம் இந்திய அணியில் கேள்விக்குறியாகிவிடும்.

விராட் கோலியின் மோசமான ஆட்டத்தால் கடைசி 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அவரை அணியில் இருந்து நீக்குமாறு முன்னாள் வீரர்கள் கூறிய போதிலும் அவருக்கு ஆதரவாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார்.

விராத் கோலியை அணியிலிருந்து உடனே நீக்குமாறு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கண்டனம் தெரிவித்து வருகிறார். ஒரு காலத்தில் இந்திய அணியில், நீங்கள் யார்? இந்திய அணிக்காக என்ன செய்தீர்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள், சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருந்து கழற்றி விடப்படுவார்கள்.

இப்பொழுது விராட்கோலிக்காக பாரபட்சம் பார்க்கின்றனர். கங்குலி வீரேந்திர சேவாக், ஜாஹீர் கான், ஹர்பஜன்சிங், அணில் கும்ப்ளே போன்ற வீரர்களை கூட இந்திய அணியில் இருந்து எளிதில் வெளியேற்றி இருக்கின்றனர். இப்பொழுது இந்திய அணியின் வெற்றியே முக்கியமாகும் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என வெங்கடேஷ் பிரசாத், விராத் கோலிக்கு எதிராக கருத்துக்களை பதிவு பண்ணி வருகிறார்.

- Advertisement -

Trending News