ரெட் கார்டு விஜய் வர்மாக்கு பிக் பாஸ் கொடுத்த சம்பளம்.. 21 நாள் சாப்பிட்டு, தூங்குனதுக்கு கிடைத்த வெகுமதி

BB7 Contestant Vijay Varma Salary: மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமான ஒன்று விஜய் டிவியின் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஆரம்பித்தது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 15 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடிக் கொண்டே போகிறது.

எந்த சீசனிலும் முதல் வாரத்திலேயே எலிமினேஷன் இருக்காது. ஆனால் இந்த ஏழாவது சீசனில் முதல் வாரத்திலேயே அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து எழுத்தாளர் மற்றும் நடிகர் பவா செல்லதுரை தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று சொல்லி தாமாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து விஜய் வர்மா கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.

விஜய் வர்மா வீட்டிற்குள் நுழைந்து போது இந்த சீசனில் இவர் கடுமையான போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் வாரத்திலேயே தேவை இல்லாமல் வாய்விட்டு பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்து விட்டார். பிரதீப்பை அடித்து விடுவேன் என்று மிரட்டியதோடு வெளியே என் நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்கள் உன்னை சும்மா விட மாட்டார்கள் என்று சொன்னதால் அந்த வாரம் ஸ்ட்ரைக் கார்டு வாங்கினார்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்கும், ஸ்மால் பாஸ் வீட்டுக்கும் போட்டியாக ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த போட்டியின் போது விஜய் வர்மா பிரதீப் கையில் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பிடுங்கும் முயற்சியில் இருவருக்கும் சண்டை வந்து பிரதீப்பை தூக்கி பொத்தென கீழே அடித்தார். இது பார்வையாளர்களிடையே கண்டனத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து விஜய் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

விஜய் வர்மா 21 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்திருக்கிறார். தற்போது அவருடைய சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. இவர் அந்த அளவுக்கு மக்களிடையே பரிட்சயம் இல்லாத நபர். இவருக்கு ஒரு நாளைக்கு 15,000 சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. தற்போது அவர் வீட்டுக்குள் இருந்த நாட்களுக்கு மொத்தமாக மூன்று லட்சம் சம்பளமாக வாங்கி இருக்கிறாராம்.

விஜய் வர்மா வெளியேறிய நிலையில் அடுத்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி ஆக உள்ளே வர இருக்கிறார்கள். இதில் VJ அர்ச்சனா மற்றும் கானா பாலா வர இருப்பது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது. மற்ற மூன்று பேர் யார் என்று இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முதல் வாரம் வெளியேற்றப்பட்ட அனன்யா வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை