அம்மா சென்டிமென்ட் எல்லாம் உங்களுக்கு மட்டும் தானா.. மோசமான ஸ்ட்ராடெஜியை பயன்படுத்தும் பிரதீப்

BB7 Tamil Pradeep: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக இப்போது பிரதீப் மீது செம காண்டில் இருக்கிறார்கள். பிரதீப் இந்த முறை வெளியேற்ற படாவிட்டால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி விடுவோம் என ஒரு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு எல்லாம் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பிரதீப்பின் நடவடிக்கை தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு போட்டியாளருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். ஓவியா, கவின், ஆரி இந்த லிஸ்டில் தான் சீசன் 7 போட்டியாளர் பிரதீப்பும் இடம் பெற்றார். மக்கள் எதற்கெடுத்தாலும் தனக்கு கைதட்டுவதால், என்ன செய்தாலும் ஆதரவு இருக்கும் என்று மனக்கணக்கு போட்டு விட்டார் பிரதீப்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு தலையில் மணி கட்டும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது பிரதீப், யாரும் எதிர்பார்க்காத வகையில் கூல் சுரேஷை தகாத வார்த்தைகளில் பேசி விட்டார். இதனால் ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடும் கொந்தளித்து போய் கிடக்கிறது. இந்த வாரம் எபிசோடில் கமல், இதைப்பற்றி பிரதீப்பிடம் கேட்டே ஆக வேண்டும் என சொல்லி வருகிறார்கள். அதையே தான், பார்வையாளர்களும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

பிரதீப் ஆண்டனி அம்மா சென்டிமென்டை வைத்து கேம் ஆடுகிறாரோ என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு வந்து விட்டது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பவா செல்லதுரை அம்மா பற்றி பேசும் பொழுது பிரதீப் கண்ணீர் விட்டு அழுதார். அதே நேரத்தில் ஜோவிகா மற்றும் கூல் சுரேஷ் அம்மா பற்றி பேசும் பொழுது ரொம்பவும் டென்ஷன் ஆகி தகாத வார்த்தைகளில் பேசி இருக்கிறார்.

எனவே வார இறுதி நாட்களின் எபிசோடில் கமல் இது பற்றி கேட்கும் பொழுது, கண்டிப்பாக பிரதீப் அம்மா சென்டிமென்ட் வைத்து உருட்டுவார் என தெரிகிறது. வழக்கம் போல பிரதீப் இந்த வாரம் தனக்கு கைதட்டு வரும் என நினைத்திருப்பார். ஆனால் இதுவரை அவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த ஆடியன்ஸ்கள் மொத்த பேரும் அவர் மீது இப்போது கோபத்தில் இருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தரப்பினரும் பிரதீப் ஆண்டனிக்கு ரொம்பவே முட்டு கொடுத்து வருகிறார்கள். பிரதீப் பேசிய பேச்சுக்கு அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவது தான் சரி. ஆனால் இதுவரை நடக்காத விஷயமாக பிரதீப் மற்றும் கூல் சுரேஷை கன்ஃபசன் ரூமுக்கு அழைத்து சமாதானம் செய்ய பிக் பாஸ் முயற்சித்தது முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்